முகத்தை காட்டாமல் Youtube சேனல் மூலம் மாதம் ₹ 50000 to 1 லட்சம் சம்பாதிக்கலாம்!.

Earn money in youtube tips tamil

Youtube’ல் சம்பாதிப்பது எப்படி ? Tips for new YouTubers | How to Earn Money in Youtube 2022 in Tamil

இனிய வணக்கம் நண்பர்களே!. இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் மற்றும் உங்களை ஒரு தொழில் முனைவோராக மாற்றும் என்று நம்புகிறேன். அதனால் இந்த பதிவை கடைசிவரை படியுங்கள். நமது இந்தியாவில் இன்றைய சூழலில் பல பேர் நன்கு படித்தவர்களாக இருக்கின்றனர், அதிலும் நம் தமிழ்நாட்டில் வீட்டில் உள்ள அனைவரும் எதாவது ஒரு டிகிரி படித்தவர்களாக உள்ளனர், படித்த படிப்பிற்கு நல்ல வேலை கிடைக்குமா என்று கேட்டால் அனைவரிடத்திலும் வரும் பதில் இல்லை என்று தான் வரும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வீட்டில் உள்ள அனைவரும் வேலை பார்த்தால் தான் காலத்தை ஓட்ட முடியும் என்றகட்டிவிட்டது. ஏன் நாம் பார்த்திருப்போம் அரசாங்க வேலை பார்ப்பவர்கள் கூட இன்றைய விலைவாசி உயர்வால் குடும்பத்தை நடத்துவதற்கு கஷ்டப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதாவது part time jobs மூலமாக பணம் சம்பாதிப்பதற்கான வழிகளை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம். part time jobs நிறைய இருக்கின்றது ஆனால் நாம் இங்கு Youtube என்ற சோசியல் மீடியாவை கொண்டு எப்படி மாதம் ₹50000 முதல் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று பார்க்க உள்ளோம்!.

2020-ஆம் ஆண்டு முதல் நம் எல்லாருக்கும் கஷ்டமான காலம் என்றே சொல்லலாம், கொரோனா வைரஸ் தோற்று காரணமாக Lock down அறிவித்ததால் பல தொழில் முடங்கின, இன்னும் சொல்லவேண்டும் என்றால் நன்கு தொழிலில் கொடிகட்டி பறந்தவர்கள் கூட இன்று கஷ்டப்படுகிறார்கள் என்பதுதான் நிஜம். ஆனால் பல பேர் கஷ்டத்தில் இருந்தாலும் சில பேர் இந்த Lock down சூழலை பயன் படுத்திகொண்டு, புதிய தொழில் முனைவோராக மாறியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. கஷ்டத்திலும் ஒரு இன்பம் என்பதைப்போல இணையத்தை பயனுள்ளதாக பயன்படுத்தி, இன்று பல நண்பர்கள், பெண்கள் கூட புதிய தொழில் முனைவோராக உருவாகி அவர்களும் பல பேருக்கு வேலை தருபவர்களாக உள்ளனர்.

Tips for New Youtuber’s in Tamil

சரி வாங்க You tube-இல் எப்படி மாதம் ₹ 50000 முதல் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம். Youtube சேனல் எப்படி தொடங்குவது என்று pothunalam.com இணையத்தின் முந்தய பதிவில் தெளிவாக கொடுத்து இருக்கின்றோம், அதனை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். யூடியூப் சேனல் தொடங்குவது மிக சுலபம் ஆனால் எந்த மாதிரியான சேனல் தொடங்குவது, எதுமாதிரியான வீடியோ போட்டால் மக்கள் அதிகம் பார்ப்பார்கள் என்று பலபேருக்கு தெரியாமல் பல யூடியூப் சேனல் தொடங்கி இன்று வரை அதற்க்காக உழைத்து அவர்களது நேரத்தையும் உழைப்பையும் வீணடித்து கொண்டு இருப்பார்கள், அதனால் இந்த பதிவில் எந்த மாதிரியான you tube சேனல் தொடங்கலாம், மக்கள் எதனை நன்கு ரசிப்பார்கள், அதில் எப்படி வெற்றி பெறுவது என்பதை கீழே தெளிவாக பார்ப்போம்.

முகத்தை காட்டாமல் எப்படி You tube-இல் பணம் சம்பாதிக்கலாம்!.

ஆண்கள், பெண்கள் பல பேருக்கு Youtube மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை இருக்கும், ஆனால் அவர்கள் முகத்தை வீடியோவில் காட்ட கூச்சப்படுவார்கள், அதனாலேயே அவர்கள் சேனல் தொடங்காமல் இருப்பார்கள். உண்மை என்னவென்றால் முகத்தை மட்டும் அல்ல உங்களது குரலை கூட காட்டாமலேயே நாம் வீடியோ பதிவிட்டு கூட நல்ல பணம் ஈட்ட முடியும்.

முகத்தை காட்டினால் தான் You tube-இல் சம்பாதிக்க முடியும் என்று இல்லை. அவர்களை விட முகத்தை காட்டாமல் பணம் சம்பாதிப்பவர்கள் அதிகமே!. அதில் சில யூடுபே சேனல் பக்கத்தை உதாரணத்திற்கு கிழே குறிப்பிடுகிறோம் பாருங்கள்.

Relaxed Guy Youtube channel

  1. வெறும் மழை தூரல் சத்தம் கொண்டு இந்த யூடியூப் சேனல் குறைந்தபட்சம் மாதம் 2 லட்சம் (Approx) சம்பாதிக்கும் என்று Social Blade மூலமாக பார்க்கலாம்.

EpicRecap Youtube channel

2. இந்த யூடுபே சேனல்-லில் பல positive thinking கருத்துககள் பகிரப்பட்டு அதன் மூலமாக மாதம் குறைந்தபட்சம் ரூபாய் 30000 ஆயிரம் முதல் 50000 ஆயிரம் (Approx) வரையிலும்  சம்பாதிக்கும் என்று Social Blade மூலமாக பார்க்கலாம்.

Yellow Brick Cinema Relaxing Music

3. மூன்றாவதாக பார்க்கும் சேனல் வெறும் ரிலாக்சிங் மியூசிக் மற்ற இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதை ரி-எடிட்டிங் மூலமாக மறுபடியும் பதிவேற்றம் செய்து முகத்தை காட்டாமல் மாதம் குறைந்தபட்சம் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும் சம்பாதிக்கும்.

Dayhan Rv youtube channel

4. இந்த youtube channel வெறும் நாயின் சத்தம் மட்டுமே பதிவேற்றம் செய்து குறைந்தது மாதம் 1 லட்சம் சம்பாதிப்பார்கள்.

மேல குறிப்பட்டவை உங்களுக்கு ஒரு ஐடியா மட்டுமே!. இதுபோல பல யூடியூப் சேனல்கள் தங்களின் முகத்தை மற்றும் குரலை கூட காட்டாமல் இன்றும் பல லட்சம் subscribers கொண்டு மாதம் 50000 முதல் 5 லட்சம் வரையிலும் சம்பாதிக்கின்றனர். இன்றே நீங்களும் இது மாதிரி அல்லது unique idea கொண்ட channel ஆரம்பிக்க இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைத்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் அடுத்த பதிவில் யூடியூப் சம்மந்தமாக சுவாரசிய தகவல் பதிவிடுகிறேன்!. 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tips in Tamil