நகம் கடிப்பதற்கான காரணம் என்ன? அந்த பழக்கத்தை கைவிடுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா

வணக்கம் நண்பர்களே..! நகம் கடிக்கும் பழக்கம் என்பது நம்மை அறியாமலே நமக்குள் இருக்கும் ஒரு தவறான பழக்கம். அதுபோல கைகளில் நகம் வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும். எல்லோரும் இருக்கும் இடத்தில் நகம் கடிக்கும் பழக்கம் நல்ல செயல் இல்லை. அந்த பழக்கம் எதனால் வருகிறது அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று யோசிப்பவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ நகம் சொத்தை குணமாக வீட்டு இயற்கை மருந்து..!

நகம் கடிப்பதற்கான காரணம் :

நகம் கடிப்பதற்கு காரணம் என்னவென்று கேட்டால் யாருக்கும் தெரியாது. அது ஒரு சிலருக்கு மட்டும் உள்ள பழக்கம். ஒருவர் எதையாவது சிந்திக்கும் போது நகம் கடிக்கும் பழக்கம் தன்னை அறியாமலே வருகிறது. பதற்றம் அதிகரிக்கும் சமயத்திலும் மற்றும் கவலை அதிகரிக்கும் சமயத்திலும் நகம் கடிப்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்த நகம் கடிக்கும் பழக்கத்தை மருத்துவ துறையில் இனிகோ பேஜியா என்று சொல்லப்படுகிறது. நகம் கடிக்கும் பழக்கம் பொதுவாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தான் அதிகம் செய்கின்றனர். நாளுக்கு நாள் இந்த பழக்கத்தை அதிகரிக்காமல் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நகம் கடிக்கும் போது நக இடுக்குகளில் உள்ள அழுக்கு நமது உடலுக்குள் சென்று தீங்கு விளைவிக்கும். ஒரு சில நேரத்தில் நம்மை அறியாமலே நக துணுக்கள் வயிற்றுக்குள் போகும் வாய்ப்பு இருக்கிறது.

நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

நீங்கள் சிந்தனையில் இருக்கும் போது எந்த சூழல் உங்களை நகம் கடிக்க வைக்கிறது என்று யோசித்து அந்த சூழலில் நகம் கடிப்பதை தவிர்க்க வேண்டும்.

தனியாக இருக்கும் போது உங்களுடைய இரண்டு கைகளையும் கட்டிக்கொள்ள வேண்டும் அல்லது பேண்ட் பாக்கெட்களின் உள்ளே கைவிட வேண்டும். இப்படி செய்தால் நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட மூடியும்.

வாரம் ஒரு முறை கண்டிப்பாக கைகளில் நகம் வெட்ட வேண்டும்.

உங்கள் விரல் நகம் சொல்லும் உங்களின்

நகம் கடிப்பதால் வரும் பாதிப்புகள்:

நகம் கடிப்பதால் என்ன பாதிப்புகள் வரும் என்பதை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • நக வளர்ச்சி குறைபாடு.
  • நகங்கள் வெளிர் நிறமாக காணப்படுதல்.
  • விரல்களின் திசையில் இருந்து நகம் விலகி செல்வது.
  • நகங்களை சுற்றிலும் இரத்த கசிவு
  • சருமத்தில் அல்லது நகங்களில் நோய்த்தொற்று
  • நகம் மெலிந்து போவது மற்றும் கடினமாக இருப்பது போல இருக்கும்.
  • நகம் மற்றும் விரல்களில் வீக்கத்துடன் காணப்படும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement