வீட்டின் வெளிப்புறம் பெயிண்ட் அடிப்பதற்கான ஐடியாக்கள்

Advertisement

House Outside Painting Colour Combinations

ஒரு வீடு அழகாக இருக்கிறது என்பதை வீட்டிற்கு சென்று தான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. வெளியே நின்று வீட்டின் வெளிப்புறத்தை பார்த்தாலே வீடு எப்படி இருக்கிறது என்பதை சொல்ல முடியும். இதில் முக்கியமாக இருப்பது அந்த வீட்டில் பெயிண்ட் கலர் தான், வீட்டின் பெயிண்ட் கலர் கொடுப்பதில் தான் அந்த வீட்டின் அழகே இருக்கிறது. அந்த வகையில் வீட்டின் வெளிப்புறத்தில் எந்த மாதிரியான கலர் கொடுத்தால் அழகாக இருக்கும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

Yellow, Blue, Cream and Grey:

Yellow, Blue, Cream and Grey

வீட்டின் வெளிப்பகுதியில் சிவப்பு-ஆரஞ்சு தரையில் சாம்பல் மேல் பகுதியில்  மஞ்சள் நீல கிரீம் போன்ற கலர் பெயிண்டை அடிப்பதன் மூலம்  உங்களது வீடு அழகாக இருக்கும். மேலும் உங்கள் வீட்டை பார்த்து கொண்டே இருக்கலாம் அந்த அளவிற்கு இந்த நிறமானது இருக்கும்.

வீட்டின் உட்புறத்தில் இந்த கலர் பெயிண்ட் அடிங்க

Peach and White – Elegant!:

வெள்ளை நிறமானது கம்பீரமான தோற்றத்தை தர கூடியது.இந்த வெள்ளை நிறத்தில் பீச் நிறம் சேரும் போது நேர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது. வீட்டின் கூரை வீட்டின் வெளிப்புற வண்ணங்களை பூர்த்தி செய்கிறது. வீட்டின் வாசலில் பச்சை தோட்டம் மற்றும் நீல நிற நீச்சல் குளம் போன்றவை இருந்து இந்த கலர் பெயிண்ட் அடித்தால்  வீடு அழகாக இருக்கும்.

White and Indigo:

White and Indigo

வெள்ளை நிறத்துடன் இண்டிகோ நிறம் சேருவது மற்றவர்கள் பார்த்து ரசிக்க கூடிய அளவிற்கு இருக்கும். இந்த நிறத்தின் இடையில் பழுப்பு நிறத்தை அடித்தால் இன்னும் அழகாக இருக்கும்.

Red and Cream:

வீட்டிற்கு சிவப்பு நிற பெயிண்ட் அடிப்பது லட்சுமி கடாட்சமாக இருக்கும். மேலும் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் இந்த நிறம் கவரும் வகையில் இருக்கும். வீட்டின் மேல் பகுதியில் சிவப்பு நிறமும், சுவர் பகுதியில் கிராம் கலரும் அடித்தால் அருமையானதாக இருக்கும்.

Grey and White:

Grey and White

வீட்டின் வெளிப்புறத்தில் சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் பெயிண்ட் அடித்திருந்தால் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க கூடிய வகையில் இருக்கும். சாம்பல் நிறமானது டல்லாக இருந்தாலும் அதில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கும் போது அதனின் தரத்தை உயர்த்தி காட்டுகிறது.

எந்தெந்த கலரை மிக்ஸ் செய்தால் என்ன கலர் கிடைக்கும் தெரியுமா.?

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement