எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இந்த விஷயங்களை கடைபிடிங்க..!

Advertisement

Stay Happy Forever Tips in Tamil

வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய பொதுநலம்.காம் பதிவில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான சில வழிகளை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி என்பது வேண்டும். எல்லா மக்களும் ஏதோ ஒரு வகையில் மனதளவில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள். மகிழ்ச்சி என்பது மற்றவர்கள் நமக்கு தருவதல்ல. நம்மால் மட்டுமே தான் நம்மை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முடியும். அந்த வகையில் இந்த பதிவின் மூலம் மகிழ்ச்சியாக இருக்க கடைபிடிக்க விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க…

கோபம் குறைய என்ன செய்ய வேண்டும்

Happy Life Tips in Tamil:

மகிழ்ச்சி என்பது அனைவரின் வாழ்விலும் இருக்கிறதா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்றே கூறலாம். எத்தனையோ மக்கள் மகிழ்ச்சியை தேடி பயணிக்கின்றனர்.

சந்தோசம் இல்லை என்று கூறுபவர்கள் எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள். உங்கள் கண் முன் நடக்கும் மகிழ்ச்சியான விஷயங்களை மட்டுமே மனதில் வைத்து கொள்ளுங்கள்.

உங்களை எரிச்சலூட்டும், உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் மற்றும் கோபத்தை உண்டாக்கும் விஷயங்களை மறந்து விடுங்கள். அதேபோல நீங்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்களை பற்றி பார்க்கலாம் வாங்க…

மகிழ்ச்சியாக இருக்க டிப்ஸ்:

தியானம் செய்யுங்கள்:

தியானம் செய்யுங்கள்

தினமும் காலையில் தியானம் செய்வதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள். தியானம் செய்யும் பொது உங்கள் மனத்திற்கு அமைதி கிடைக்கிறது. மனதில் உள்ள கவலைகளை மறந்து தியானம் செய்யுங்கள்.

அது உங்களுக்கு மகிழ்ச்சி தரும். உங்கள் கோபத்தை குறைக்க உதவுகிறது. இதனால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்வீர்கள்.

உங்களை நேசியுங்கள்:

உங்களை நேசியுங்கள்

 

முதலில் நீங்கள் உங்களை நேசியுங்கள். உங்களை தவிர யாராலும் உங்களை நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது. உங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்களை மட்டும் செய்யுங்கள்.

நமக்கு பிடித்த விஷயங்களை செய்யும் போது நமது மனது அளவற்ற சந்தோஷத்தை அடைகின்றது. மற்றவருக்காக வாழாதீர்கள். உங்களுக்காக வாழுங்கள்.

அதேபோல உங்களை சுற்றி உள்ளவர்களையும் நேசியுங்கள். யாரையும் வெறுக்காதீர்கள்.

மனம் திறந்து பேசுங்கள்:

மனம் திறந்து பேசுங்கள்

மற்றவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். மனதில் எதையும் மறைத்து வைக்காதீர்கள். மற்றவர்களிடம் அன்பை மட்டுமே வெளிப்படுத்துங்கள்.

மனதில் கவலைகளை மறைத்து வைக்காதீர்கள். மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் முகத்தில் சிறிய புன்னகையை வைத்து கொள்ளுங்கள்.

கோபப்படுவதை தவிர்த்து கொள்ளுங்கள். யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். முடிந்தவரை மற்றவர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.

மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்:

மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்

யாரையும் ஒதுக்கி வைக்காதீர்கள். இந்த உலகில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு வகையில் தவறு செய்தவர்கள் தான்.

அதனால் தவறு செய்தவர்களை மன்னிக்க கற்று கொள்ளுங்கள். மற்றவர் செய்த தவறுக்கு நமக்கு நாமே கொடுக்கும் தான் கோபம். அதனால் யாரிடமும் கோபம் காட்டாதீர்கள்.

கோபம் படுவதற்கு பதிலாக தவறு செய்தவர்களை மன்னித்து பாருங்கள். உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும்.

நன்மை செய்யுங்கள்:

நன்மை செய்யுங்கள்

எந்த ஒரு சூழலிலும் நல்லது செய்யும் எண்ணத்தை கை விடாதீர்கள். எப்போதும் நல்ல விஷயங்களையே செய்யுங்கள். நாம் நல்ல விஷயங்களை செய்யும் போது  நம்மை பாராட்ட வேறு யாரும் தேவையில்லை.

நமது மூளையே நம்மை பாராட்டி கொள்ளும். அதுவே நம் மனதிற்கு நிறைவாக இருக்கும். தவறு செய்து குற்றவுணர்ச்சி பெறுவதை விட நல்லது செய்து மகிழ்ச்சியை அடையலாம்.

அதனால், நல்லதே செய்யுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement