உங்க வீட்டில் உள்ள பித்தளை பாத்திரங்கள் தகதகன்னு மின்ன வேண்டுமா..? அப்போ இதை மட்டும் தேய்த்து கழுவுங்கள் போதும்..!

Advertisement

How to Clean Brass Vessels Easily in Tamil

பொதுவாக நாம் அனைவரின் வீட்டிலேயும் பித்தளை பாத்திரம் இருக்கும். அதிலும் குறிப்பாக பித்தளை பூஜை பாத்திரங்கள் இருக்கும். அதனை சுத்தம் செய்வது என்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாகவே இருக்கும். அதனால் அதனை சுத்தம் செய்வதற்கு எளிமையான ஒரு முறையை நம்மில் பலரும் தேடி கொண்டிருப்போம்.

அப்படி நீங்களும் உங்கள் வீட்டில் உள்ள பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு ஒரு எளிமையன முறையை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் பித்தளை பாத்திரங்களை எளிமையான முறையில் சுத்தம் செய்வதற்கு உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்க வீட்டில் உள்ள பித்தளை பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Clean Pital Utensils at Home in Tamil:

How to Clean Pital Utensils at Home in Tamil

உங்கள் வீட்டில் உள்ள பித்தளை மற்றும் பூஜை பாத்திரங்களை எளிமையான முறையில் சுத்தம் செய்வதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க.

முதலில் அதற்கு தேவையான பொருட்களை இங்கு காணலாம்.

  1. செங்கல் பொடி – 4 டேபிள் ஸ்பூன் 
  2. பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  4. எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
  5. வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் செங்கல் பொடி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க

உப்பினை கலந்து கொள்ளவும்:

பின்னர் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் உப்பினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடனே 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து கொள்ளுங்கள்.

வினிகரை கலக்கவும்:

How to clean bronze utensils at home in tamil

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் வினிகரை கலந்து நீங்கள் சுத்தம் செய்ய போகும் பித்தளை பாத்திரங்களில் தடவி 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் கழித்து லேசாக தேய்த்து நன்கு சுத்தமான தண்ணீரை பயன்படுத்தி கழுவி கொள்ளுங்கள்.

இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் உங்கள் பித்தளை பாத்திரங்கள் அனைத்தும் தகதகன்னு மின்னும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement