Ceiling Fan Cleaning Tips in Tamil
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் வீட்டில் உள்ள Ceiling Fan சுத்தம் செய்வது எப்படி.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, வீட்டை வாரத்திற்கு ஒரு முறையாவது முழுமையாக சுத்தம் செய்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள உபயோகப்பொருட்களை ஏதேனும் விழா நாட்கள் வந்தால் மட்டுமே சுத்தம் செய்வோம். உபயோகப்பொருட்களை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடிமான வேலை என்பதால் அதனை எப்போதாவது தான் சுத்தம் செய்வோம். ஆகையால், வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றான Ceiling Fan மிகவும் எளிதாக முறையில் எப்படி சுத்தம் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
வீட்டில் அதிக பயன்பாட்டில் இருப்பது Fan தான். இதனால் அதிகம் அழுக்காகவும் தூசு படிந்து இருக்கும். அதுமட்டுமில்லாமல், பழைய FAN போன்றும் இருக்கும். எனவே, அழுக்குப்படிந்த Ceiling Fan -ஐ எப்படி பளிச்சென்று சுத்தம் செய்வது என்பதை (how to clean ceiling fan easily) தெரிந்துகொள்வோம் வாங்க.
How to Clean Ceiling Fan Easily in Tamil:
டிப்ஸ் 1:
முதலில், வீட்டின் மின்சாரத்தை துண்டித்து விட்டு அதன் பிறகு, உங்கள் முகத்தில் முகக்கவசம் அணிந்து கொண்டு Ceiling Fan-ஐ சுத்தம் செய்ய தொடங்குங்கள்.
பழைய தலையணை உறையை எடுத்து Ceiling Fan இறக்கையில் போட்டு அதன் தூசுகளை நன்கு துடைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ஃபேனில் உள்ள தூசுகள் பறக்காமல் தலையணை உறையில் படிந்து இருக்கும். இவ்வாறு நீங்கள் எல்லா இருக்கையிலும் தலையணை உறையை மாட்டி துடைத்து எடுங்கள்.
அடுத்ததாக, ஒரு ஸ்ப்ரே பாட்டியிலில் சிறிதளவு DETERGENT LIQUID சேர்த்து அதனை Ceiling Fan இறக்கையில் லேசாக தெளித்து ஒரு சிறிய துணி வைத்து துடைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் Ceiling Fan-ல் உள்ள அழுக்குகள் நீங்கி புத்தம் புதுசு போல் பளிச்சென்று மாறிவிடும்.
வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .?
டிப்ஸ் 2:
உங்கள் வீட்டில் உள்ள பழைய சாக்ஸ் துணிகளை எடுத்து கொள்ளுங்கள். அந்த சாக்ஸ்களை தண்ணீரில் நனைத்து பிழிந்து, Ceiling Fan இறக்கையில் வைத்து அதன் இருமுனைகளையும் நீங்கள் கையில் கொண்டு பிடித்து நன்கு தேய்த்துவிட்டு எடுத்தீர்கள் என்றால் அதிலுள்ள அணைத்து தூசிகளும் நீங்கி விடும். அதன் பிறகு, ஒரு துணி கொண்டு துடைத்து எடுத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் Ceiling Fan -ல் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கும்.
பிளாஸ்கின் உட்புறத்தில் உள்ள கரையை சுத்தம் செய்வது எப்படி.?
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |