1 மாதம் வரை பச்சை மிளகாய் வீணாகாமல் இருக்க இந்த டிப்ஸை மட்டும் Try பண்ணுங்க போதும்..!

Advertisement

How to Store Green Chillies for Long Time in Tamil

பொதுவாக நாம் சமைக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக தேவைப்படுவது மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் தான். அதில் மளிகை பொருட்களை நாம் வாங்கி மாதக்கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். ஆனால் காய்கறிகளை ஒரு வாரம் கூட நம்மால் முழுமையாக பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அவற்றை நம்மால் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. அதிலும் இந்த பச்சை மிளகாயை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைப்பது என்பது மிக மிக கடினம். அதனால் தான் இன்றைய பதிவில் மாதக்கணக்கில் பச்சை மிளகாவை எவ்வாறு கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைப்பது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

How to Store Green Chillies for Months in Tamil:

பச்சை மிளகாய் அழுகாமல் இருக்க

நமது சமையலின் முக்கியமான மூலப்பொருட்களில் ஒன்றான பச்சை மிளகாவையே எவ்வாறு மாதக்கணக்கில் சேமித்து வைப்பது என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
  2. தண்ணீர் – தேவையான அளவு
  3. செய்தித்தாள் – 1
  4. பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி டப்பா – 1 

1 மாதம் வரை தக்காளி கெட்டு போகாமல் இருக்க 1 டீஸ்பூன் எண்ணெய் போதும்

செய்முறை:

பச்சை மிளகாய்

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள பச்சை மிளகாய்களின் காம்புகளை நீக்கிவிடுங்கள். பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை எடுத்து நன்கு ஈரம் இல்லாத அளவிற்கு துடைத்து கொள்ளுங்கள். அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி டப்பாவை நன்கு சுத்தம் செய்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள செய்தித்தாளை இரண்டாக நறுக்கி ஒரு பாதியினை டப்பாவில் போட்டு கொள்ளுங்கள்.

பின்னர் அதனின் மீது நாம் சுத்தம் செய்து வைத்துள்ள பச்சை மிளகாய்களை வைத்து அதனின் மீது மற்றொரு பாதி செய்தி தாளை போட்டு நன்கு மூடியினை போட்டு மூடி கொள்ளுங்கள்.

இப்படி செய்வதன் மூலம் பச்சை மிளகாவை மாதக்கணக்கில் சேமித்து வைத்து கொள்ள முடியும்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

மாத கணக்கில் புதினா வாடி போகாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement