இட்லி மாவு அரைக்கும் போது இதை மட்டும் செய்யுங்கள் இட்லி மாவு பக்குவம் தவறாது..!

Advertisement

பஞ்சு போல இட்லி 

வணக்கம் நண்பர்களே..! காலை, இரவு என இரு வேலையும் இட்லி சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. ஒரு சிலர் இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். அதுபோல சிலருக்கு இட்லி என்று சொன்னாலே பிடிக்காது. காலையில் இட்லி சாப்பிடும் போது சிலரது வீட்டில் சண்டை கூட வரும். எதனால் சண்டை வருகிறது என்றால் இட்லி அழுத்தமா இருக்கு, கல்லு மாறி இருக்கு அப்படி என்று சொல்வார்கள். அதை நினைத்து கவலை பட வேண்டாம். இனி இட்லி மாவின் பக்குவம் தவறவே தவறாது. இந்த 1 பொருளை இட்லி மாவு அரைக்கும் போது சேர்த்து கொள்ளுங்கள். மேலும் தொடர்ந்து படித்து விரைவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ இட்லியில் சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்..!

பஞ்சு போல இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • இட்லி அரிசி- 4 கப் 
  • உளுந்து- 1 கப்
  • சோயா பீன்ஸ்– 2 தேக்கரண்டி 
  • வெந்தயம்– 1 தேக்கரண்டி  
  • உப்புதேவையான அளவு 

இட்லி மாவு அரைக்கும் முறை:

idli maavu araipathu eppadi in tamil

ஸ்டேப்- 1

முதலில் அரிசி, உளுந்து இரண்டையும் தனி தனியாக எப்போதும் இட்லி மாவு அரைக்க ஊறவைப்பது போல் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு வெந்தயம், சோயா பீன்ஸ் இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக ஊறவைக்க வேண்டும்.

ஸ்டேப்- 2 

அரிசி, உளுந்து கழுவதற்கு என்று தனி பக்குவம் இருக்கிறது. சுத்தமான தண்ணீரில் அரிசி மற்றும் உளுந்தை நன்றாக கழுவ வேண்டும். அரிசி வெள்ளை நிறமாக வரும் வரை சுத்தமாக கழுவ வேண்டும். அப்போது தான் இட்லி பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும்.

ஸ்டேப்- 3

எல்லா பொருட்களும் நன்றாக ஊறியவுடன். முதலில் வெந்தயம் மற்றும் சோயா பீன்ஸை எடுத்துக்கொண்டு கிரைண்டரில் போட்டு தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும்.  அப்படி தண்ணீர் தேவைப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும்.

ஸ்டேப்- 4

கிரைண்டரில் வெந்தயம் மற்றும் சோயாபீன்ஸ் நன்றாக அரைப்படவுடன் தண்ணீர் இல்லாமல் உளுந்தை நன்றாக வடிகட்டி கிரைண்டரில் போட வேண்டும். கிரைண்டரில் மாவு அரைபட்டு கொண்டிருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்ற வேண்டும். உளுந்த மாவு கையில் ஒட்டாத நிலைக்கு வந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

ஸ்டேப்- 5

அடுத்தாக அதே கிரைண்டரில் அரிசியை போட்டு நன்றாக மைய அரைக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அரிசி மாவு பதத்திற்கு வந்தவுடன் அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் அரிசி மாவையும் வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 6

அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து உங்களுடைய கைகளால் நன்றாக கரைத்து மூடி வைத்து விடுங்கள். மாவு நன்றாக புளித்த பிறகு அடுப்பை பற்றவைத்து அதில் இட்லி பாத்திரத்தை வைத்து இட்லி தட்டில் அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றுங்கள். இட்லி வெந்தவுடன் சாம்பார், சட்னி சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். இட்லி மாவு பக்குவம் தவறவே தவறாது இட்லி பஞ்சு போல இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement