ஒட்டிபோன கன்னம் குண்டாக மாற வேண்டுமா..? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..!

கொழு கொழு கன்னம் பெற 

கொழு கொழு கன்னம் பெற 

ஹலோ நண்பர்களே… இன்று இந்த பதிவு எல்லோருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். ஒல்லியாக இருக்கும் அனைவருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். அனைவருக்கும் கன்னம் குண்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். என்ன செய்தாலும் கொழுக்கொழு கன்னம் இல்லை என்று கவலை படுகிறீர்களா..? ஒட்டிய கன்னம் கொழு கொழு என்று மாற வேண்டுமா..? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..! இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கன்னம் ஒட்டிப்போக காரணம் என்ன?

முகத்தை அழகாக காட்டுவது கன்னங்கள் தான். முகத்தை என்ன தான் அழகு படுத்தினாலும் கன்னம் ஒட்டிப்போய் இருந்தால் பார்க்கவே அசிங்கமாக இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் கன்னங்கள் ஒட்டியே தான் இருக்கிறது. அதற்கு என்ன தான் செய்வது என்ற பல கேள்விகள் இருக்கும். அன்றாட வாழ்வில் நீங்கள் உண்ணும் உணவுகளில் நீர் சத்து அதிகம் நிறைந்துள்ள உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருப்பது கன்னம் ஒட்டி போவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. தினமும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வதால் அழகான கன்னங்களை பெறலாம். பெரும்பாலும் உணவில் மாவு சத்து, புரதம், கொழுப்பு சத்து உள்ள பொருட்களை சேர்த்து சாப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ ஐஸ் கட்டி மசாஜ்

மேலும், அழகான கொழு கொழு கன்னம் பெற இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..!

டிப்ஸ் -1:

ஆப்பிள் மற்றும் கேரட் துண்டுகளை அரைத்து ஜூஸ் ஆக எடுத்து கொண்டு அதில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கொழு கொழு கன்னங்களை பெறலாம்.

டிப்ஸ் -2:

1 ஆப்பிளை தோல் சீவி நன்கு அரைத்து அதை கன்னத்தில் எல்லா பகுதியிலும் வாரம் 3 முறை பேஷியல் செய்து வருவதால் குண்டான கன்னங்களை பெறலாம்.

டிப்ஸ -3:

தினமும் குளிப்பதற்கு முன்பு 1 ஸ்பூன் வெண்ணெயுடன் சர்க்கரை கலந்து அதை கன்னங்களில் பேஷியல் செய்து வர ஒட்டிய கன்னங்கள் குண்டாக மாறும்.

கொய்யா இலையின் முக அழகு ரகசியம் இந்த டிப்ஸ் யாருக்கு தெரியும்

டிப்ஸ -4:

பப்பாளியுடன் தேன் கலந்து அதை கன்னத்தில் நன்கு மசாஜ் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதுபோல் செய்து வந்தால் குண்டான கன்னங்களை பெறலாம்.

டிப்ஸ -5:

1 ஸ்பூன் பால் மற்றும் 1 ஸ்பூன் வெண்ணெய் இவற்றுடன் பார்லி தூள் சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலந்து பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்திருந்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் கொழு கொழு கன்னம் கிடைப்பதோடு முகம் பொலிவு பெரும்.

டிப்ஸ -6:

காலையில் எழுந்ததும் வாய்க்குள் காற்றை நிரப்பி கொண்டு அந்த காற்றை மெதுவாக விடுவது போல் தினமும் 10 முறை செய்து வந்தால் ஒட்டிய கன்னம் குண்டாக மாறும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty tips in tamil