தினமும் பயன்படுத்தும் பாலை குடிக்காமல் இதை செய்தால் நமக்கு இவ்வளவு தருகிறதா

milk uses in tamil

பால் அளிக்கும் அற்புத நன்மைகள்

ஹெலோ பொதுநலம்.காம் உறவுகளே அனைவருக்கும் வணக்கம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் ஒரு வேலை செய்வதை மட்டும் பற்றி நமக்கு அதிகளவு தெரிந்திரிக்கும் ஆனால் எப்போதாவது யோசித்தது உண்டா வேறு என்ன தான் செய்தும் இந்த பொருட்களெல்லாம் வேறு என்ன உதவி செய்கிறது என்று..! அப்படி நாம் தினமும் பயன்படுத்தும் பால் நமக்கு வேறு என்னென்ன உதவிகள் செய்கிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

பால் அழகு குறிப்பு:

டிப்ஸ்: 1

முதலில் நன்றாக பாலை காய்ச்சு வைத்துக்கொள்ள வேண்டும் அதன் பின் ஒரு காட்டன் துணியை எடுத்து அதில் நனைத்து முகத்தில் படும்படி தேய்த்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் படும் அழுக்குகள் தூசிகள் மறையும். முகம் புத்துணர்ச்சி பெரும். மேக்கப் போட வேண்டிய அவசியம் இல்லை.

இந்த பாலில் இருக்கு லாக்டிக் அமிலம் சக்திவாய்ந்தது. சருமத்துக்கு பொலிவை அளிக்க கூடியது. அதனால் இதனை முகத்தில் கண்டிப்பாக தடவலாம். வறட்டு போகமானால் இருக்கும். இதனை தினமும் செய்ய வேண்டும்.

டிப்ஸ் -2

காய்ச்சாத பால் 1 தேக்கரண்டி எடுத்து அதில் பஞ்சி உருண்டைகளை 2 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். பின்பு அதனை எடுத்து கண் மூக்கு, வாய், கழுத்து பகுதிகளில் தேய்த்து பின் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும். அதனால் முகம் எப்போதும் பொலிவாக காணப்படும்.

டிப்ஸ் -3

சிலர் பார்ப்பதற்கு இளம் வயதிலேயே வயது ஆனது போல் தோற்றம் காணப்படும். இதற்கு முக்கிய காரணம் அதிக ரசாயனம் கலந்த மேக் அப் சாதனங்கள், அதிகம் பயன்படுத்துவதினால்.  ஆனால் சரியான பராமரிப்பின்மையாலும் முகத்தில் சுருக்கங்கள் வருவது அதிகரிக்க கூடும்.

இதை சரி செய்ய பாலை தினமும் முகத்திற்கு பயன்படுத்துங்கள். வேறு எந்த face பேக் போட்டாலும் அதில் சிறிதளவு பால் சேர்த்து கொள்வது நல்லது.

டிப்ஸ் -4

கோடை காலங்களில் ஏற்படும் பருக்கள் புண், சிவப்பு தடிப்புகள் போன்ற பல பிரச்சனைக்கு இந்த பால் மருந்தாக உதவுகிறது. முக்கியமாக இந்து போன்ற பிரச்சனைகள் வந்தால் முகத்தில் எரிச்சல் உண்டாகும் அப்போது முகத்தை பாலால் கழுவியோ அல்லது பஞ்சை அதில் நனைத்தோ முகத்தில் தடவி கொண்டால் எரிச்சலை தடுக்கலாம்.

டிப்ஸ் -5

பெடிக்யூர், மெனிக்யூர் செய்யும் போது கூடுதல் அழகுக்காக பாலை பயன்படுத்தலாம். காய்ச்சாத பால் ஒரு தேக்கரண்டியுடன் இரண்டு தேக்கரண்டி நீர் சேர்த்து நன்றாக கலக்கி அதில் கைவிரல்களை பத்து நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.

அதே பாலை மூன்று மடங்கு சூடு செய்து கால் நனைக்கும் அளவிற்கு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அதில் சூடு செய்த பாலை ஊற்றி காலை அதில் வைத்து சிறிது நேரம் அல்லது 15 நிமிடம் ஊற விட்டால் கால் விரல் நகம் வலிமையாக இருக்கும்.

இந்த பொருள் 1 கைப்பிடி இருந்தால் போதும் முகம் மட்டுமில்லாமல் உடலும் வெள்ளையாகும்..!

இதுபோன்ற டிப்ஸ்களை பற்றி தெரிந்துகொள்ள  இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tips