Second Hand Phone Tips in Tamil
Second Hand போன் வாங்க போகிறவர்கள் கண்டிப்பாக இதை அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்..! பொதுவாக நாம் ஏன் புதிய போன் வாங்காமல் Second Hand போன் வாங்குகிறோம் எல்லாம் பணம் பிரச்சனையால் தான். ஆனால் நாம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றவாறு போன் இல்லையென்றால் கஷ்டமாக தான் இருக்கும். அதனால் தான் புதிய போன் வாங்கி விடுவோம் என்று நினைப்பீர்கள்.
நாம் வாங்கும் போனில் சரியாக தெரிந்து கொண்டு வாங்கினால் அதில் ஏன் தவறுங்கள் இருக்கப் போகிறது என்று நினைப்பீர்கள். சரியான போன் என்பதை அறிந்துகொள்ள இந்த டிப்ஸை Follow பண்ணுங்க..!
Second Hand Phone Tips in Tamil:
No: 1
முதலில் Second Hand போன் வாங்க கடைக்கு சென்றால் அந்த போன் வாங்கிய பில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும். எப்போதும் போன் வாங்கினால் அதனுடைய பில் மிகவும் அவசியமானது.
ஏனென்றால் அதில் தான் அந்த போனை யார் வாங்கினார்கள், எப்போது வாங்கினார்கள், எங்கிருந்து வாங்கினார்கள் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினார்கள், என்ன நிறம், என்ன மாடல், வாரண்டி இருக்கா இல்லையா என்ற அனைத்து விவரமும் அதில் தான் இருக்கும். முக்கியமாக போனுடைய IMEI நம்பர் கூட அதில் தான் இருக்கும். ஆகவே போன் வாங்கினால் பில் முக்கியம்.
No: 2
எப்படி பில் முக்கியமோ அதேபோல் போன் Box இருக்கா என்பதை தெரிந்து கொள்ளவும். அதில் சார்ஜ், கேபிள் ஹெட்செட் என அனைத்தும் இருக்கிறதா பில்லில் உள்ள அனைத்து விவரமும் Box –யில் இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ளவும். பில் இல்லையென்றால் போன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது.
No: 3
அடுத்து அந்த போனை கையில் எடுத்து எதாவது டேமேஜ் இருக்கிறதா என்பதை சுற்றி பார்க்கவும். முக்கியமாக கேமரா, சார்ஜ் போடும் இடம், முக்கியமாக Display என அனைத்து இடத்தையும் பார்க்கவும். பொதுவாக இதுபோன்ற இடத்தில் ஏதாவது டேமேஜ் ஆகும் பொருட்கள் தான்பெரும்பாலும் Second Hand என்று விற்பனைக்கு வரும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👉👉 Smart Phone-ல் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சூப்பரான Tricks..!
No: 4
அடுத்து முக்கியமான விஷயம் இதுவரை பார்த்தது அனைத்தும் வெளிப்புற தோற்றத்தை மட்டுமே போனுடைய உள்புறம் செக் பண்ண வேண்டும் அல்லவா..? ஆகவே நீங்கள் வாங்கும் போனை எடுத்துக் கொள்ளவும். அடுத்து அதில் *#06# என்பதை type செய்து கால் செய்யவும் அதில் உங்களுக்கு ஒரு நம்பர் வரும் அதனை எடுத்துக் கொள்ளவும்.
நீங்கள் எடுக்கும் போன் Oppo, vivo, mi என்று Company என்றால் அவர்களுடைய சொந்த Web Site டில் இந்த நம்பரை போட்டால் நீங்கள் வாங்கும் போனுடைய அனைத்து விவரமும் வந்துவிடும். அப்படி வரவில்லை என்றால் நீங்கள் வாங்கும் போன் தரமானது. அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு வேறு போனுடைய பில் கொடுத்துள்ளார்கள் என்று அர்த்தம்.
No: 5
இப்போது அனைத்தும் சரியாக வந்து விட்டது என்றால் அந்த போனுடைய கெபாசிட்டி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு போன் வாங்கி அதில் உங்களுடைய சிம் போட்டு யூஸ் பண்ணி பாருங்கள். அப்படி பார்க்கும் பட்சத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமில்லாமல் Location, Bluetooth, Net என அனைத்தையும் On செய்து வைத்து 20 நிமிடம் யூஸ் பண்ணி பாருங்கள். அதன் பின் அதில் சார்ஜ் எவ்வளவு நிற்கிறது இது அனைத்தும் On செய்தும் சரியாக உள்ளதா என்பதையும் பார்த்து அதன் பின் வாங்கிக் கொள்ளுங்கள்..!
இது அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்த்து அதன் பின் வாங்குவது நல்லது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 Smart Phone -ல இந்த Settings எல்லா இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் இருந்தோமா..?
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |