வீட்டு குறிப்பு டிப்ஸ்
தினமும் சமையல் செய்வது மட்டும் இல்லாமல் வீட்டில் நிறைய வேலைகள் இருக்கும். சமைப்பதை விட வீட்டில் இருக்கும் மற்ற வேலைகள் தான் பெண்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். பாத்திரம் கழுவுதல் முதல் துணி துவைப்பது வரை என நிறைய வேலைகள் இருப்பதால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். உங்களுடைய கஷ்டத்தை எளிதில் போக்கும் வகையில் இன்றைய பதவி மிகவும் உதவியானதாக இருக்கும். ஆகையால் இன்றைய டிப்ஸ் பதிவினை முழுவதுமாக படித்து பயன்பெறலாம் வாங்க..!
Useful Home Cleaning Tips in Tamil:
டிப்ஸ்- 1:
உங்கள் வீட்டில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வைத்து இருக்கும் பாத்திரம் மற்றும் வேறு எதாவது துர்நாற்றம் வீசும் பாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கு இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்.
முதலில் ஒரு கிண்ணத்தில் 1/4 ஸ்பூன் சமையல் சோடா எடுத்துக்கொண்டு அந்த சோடாவை எலுமிச்சை பழத்தோலால் தொட்டு துர்நாற்றம் வீசும் அனைத்து பாத்திரங்களையும் நன்றாக தேய்த்து விடுங்கள்.
அதன் பிறகு அந்த பாத்திரத்தை வழக்கம் போல் கழுவி விடுங்கள். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் பாத்திரங்களில் துர்நாற்றமே இருக்காது.
ட்ரை பண்ணுங்க டாய்லெட்டில் கரப்பான் பூச்சி மற்றும் நாற்றம் வராமல் பிரஷ்ஷாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க
டிப்ஸ்- 2:
இரண்டாவதாக பாத்திரங்களை எளிதில் பளபளக்க வைப்பதற்கான டிப்ஸினை பற்றி பார்க்கப்போகிறோம்.
அதற்கு முதலில் நீங்கள் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் 1 ஸ்பூன் ஷாம்பு மற்றும் 1 ஸ்பூன் துணி பவுடர் போட்டு 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் கழுவ தயார் செய்து வைத்துள்ள தண்ணீருடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதனை நன்றாக ஆற விடுங்கள்.
இப்போது உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா பாத்திரங்களையும் இந்த ஜெல்லை தொட்டு விளக்கினால் போதும் பாத்திரம் புதியது போல பளபளக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
டிப்ஸ்- 3
கடைசியாக நாம் பார்க்க போகும் குறிப்பு வாஷிங் மிஷினில் துணி ஒவ்வொன்றாக வருவதற்கான டிப்ஸ்.
முதலில் நீங்கள் துணியை வாஷிங் மிஷினில் போடும் போது மொத்தமாக போடாமல் ஒவ்வொன்றாக போடா வேண்டும். அதன் பின்பு துணிகளில் துர்நாற்றம் வீசாமல் இருக்க துணியுடன் வாசனை திரவியம் சேர்த்து துணியை வாஷிங் மிஷினில் துவைக்க போடுங்கள்.
இப்படி செய்தால் துணி துவைத்த பிறகு வாஷிங் மிஷினில் இருந்து துணி தனி தனியாக வரும் அது மட்டும் இல்லாமல் துணியில் துர்நாற்றமும் வீசாது.
இதையும் படியுங்கள் ⇒ பாத்ரூம் டைல்ஸ் எவ்வளவு பழையதாக இருந்தாலும் புதிதாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |