கையில் கறைபிடிக்காமல் வாழைப்பூ சுத்தம் செய்யும் முறை | Valaipoo Sutham Seivathu Eppadi
பொதுவாக வாழைப்பூவை வாரத்தில் ஒரு முறை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது என்பது மிகவும் நல்லது. இதனை வாரத்தில் ஒரு முறை எடுத்துக்கொள்வதன் மூலம் இரத்த சோகை பிரச்சனை எளிதில் குணமாகும். வாழைப்பூவை பொரியல் செய்து நீரிழிவு நோய் குணமாகும். ஆனால் இன்றைய காலத்தில் வாழைப்பூவை யாரும் அதிகம் எடுத்துக்கொள்வதில்லை இதற்கு என்ன காரணம் என்றால். இதனை ஆய்வதற்கு அதிக நேரம் ஆக்குவதுமட்டும் இல்லாமல் கொஞ்சம் சிரமமாகவும் இருக்கும்.
இன்னும் பலருக்கு இதனை எப்படி அரிய வேண்டும் என்பதும் தெரிவதில்லை. குறிப்பாக வாழைப்பூவை அரிந்தால் கைகள் கறையாகிவிடும். இதன் காரணமாகவே யாரும் இதனை வாங்கி அதிகம் சமைப்பதில்லை. சரி இன்றைய பதிவில் கை கறையாகாமல் வாழைப்பூவை ஈஸியாக இப்படி சுத்தம் செய்வது எப்படி என்று படித்து பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- மோர் – 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் அல்லது உப்பு – கையில் தடவுதற்கு தேவையான அளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
துணியில் இருக்கும் எண்ணெய் கறையை நீக்க சூப்பர் ஐடியா.!
வாழைப்பூ சுத்தம் செய்யும் முறை – Valaipoo Sutham Seivathu Eppadi :
முதலில் உங்கள் கைகளில் எண்ணெய் அல்லது உப்பு தண்ணீரை தடவி கொள்ளுங்கள்.
அதன் பிறகு வாழைப்பூவை எடுத்து அதன் ஒவ்வொரு இதழையும் தனியாக பிரித்து எடுக்க வேண்டும்.
அதன் பின் வாழைப்பூவினை மிதமாக எடுத்து அதன் முனையினை கையால் தீட்டினால் பூக்கள் மலரும். ஒவ்வொரு பூக்களின் நடுவிலும் ஒரு நரம்பு இருக்கும், அதனை எடுத்துவிட வேண்டும். ஏன் இந்த நரம்பை எடுக்க வேண்டும் என்றால் அதனை வேக வைத்தாலும் வேகாது சாப்பிடும் போது நறநறன்னு இருக்கும். அதேபோல் வயிற்றுக்கும் நல்லது கிடையாது. ஆக அதனை அகற்றிவிடவும்.
இந்த நரம்பை வாழைப்பூ வெள்ளை கலர் வரும் வரைதான் எடுக்க வேண்டும். வாழைப்பூவின் நுனி பகுதியில் நரம்புகள் இருக்காது. அதனை எடுக்க தேவையில்லை.
அதேபோல் அதன் அருகில் ரப்பர் போன்று இருக்கும் இருக்கும் மற்றொரு இதழையும் நீக்க வேண்டும். அவ்வளவு தான் அதன் பிறகு வாழைப்பூவை பொடிதாக நறுக்க வேண்டும்.
இவ்வாறு அரிந்த வாழைப்பூவை மோர் கலந்த நீரில் போட்டு வைத்து நன்றாக கழுவ வேண்டும். பின்னர் இதனை சமைக்க பயன்படுத்தலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீடு மற்றும் பாத்ரூம் முழுவதும் வாசனையாக இருக்க இந்த ஒரு பாட்டில் போதும்..!
குறிப்பு:
கையில் எண்ணெய் அல்லது உப்பு தண்ணீர் தடவிக்கொண்டு வாழைப்பூவை அரிந்தால் கைகளில் கறை பிடிக்காது.
அதேபோல் மோர் கலந்த நீரில் அரிந்த வாழைப்பூவை போடுவதால் வாழைப்பூவும் கருக்காது. ஃப்ரெஷாகவே இருக்கும். அதனை பொரியல் செய்யும் போது நல்ல வெள்ளை நிறமாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |