சிறுத்தை பற்றிய தகவல்கள் தமிழ் | Leopard About Information in Tamil..!

Advertisement

Leopard About Information in Tamil

நாம் நிறைய வகையான விலங்குகளை பற்றி பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் காலத்தில் படித்து இருப்போம் அல்லது புத்தகத்தில் பார்த்து இருப்போம். விலங்களில் வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகள் என்று இரண்டு வகையான விலங்குகள் இருக்கிறது. காட்டு விலங்குகளை நாம் நேரில் அவ்வளவாக பார்ப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அதே சமயம் எங்கேயாவது சுற்றுலாவிற்கு செல்லும் போது அங்கு அமைந்துள்ள பூங்காவில் சில வகையான காட்டு விலங்குகளை மட்டும் காணலாம். அதிலும் குறிப்பாக சிங்கம் மற்றும் சிறுத்தை இந்த இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அவை இரண்டும் ஒன்று கிடையாது. அதனால் இன்று சிறுத்தை பற்றிய தகவலை தெரிந்துக்கொள்ள போகிறோம்.

அணில் பற்றிய சுவாரசியமான 10 உண்மைகள்.. 

சிறுத்தை பற்றிய தகவல்கள்:

 சிறுத்தை பற்றிய தகவல்கள்

காட்டில் வாழக்கூடிய சிறுத்தை ஆனது ஒரு பாலூட்டி விலங்கு ஆகும். அதேபோல் இந்த சிறுத்தை ஆனது பூனை குடும்பத்தை சேர்ந்த காட்டு விலங்கு ஆகும். பூனை மட்டும் இல்லாமல் ஜாகுவார், புலி மற்றும் சிறுத்தையும் இதில் அடங்கும்.

இந்த சிறுத்தை ஆனது இந்தியா, ஆப்பிரிக்கா, இமயமலை, ரஷ்யா, சீனா, பாலைவனம், மலேசியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் அரேபியா தீபகற்பம் ஆகிய பெரும்பாலான இடங்களில் வாழக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

மேலும் சிறுத்தை ஆனது விலங்குகளை காட்டில் வேட்டையாடி மட்டுமே உணவாக உண்ணுகிறது. அதேபோல் இவை தண்ணீரை அதிகமாக குடிப்பது இல்லை. அதற்கு பதிலாக உணவாக உண்ணும் இரைச்சலில் இருந்து ஈரப்பதத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறது.

அதேபோல் சிறுத்தைகள் எவ்வளவு எடை அதிகமான இரையினையும் மரத்தின் மேலே கொண்டு போய் வைத்து சாப்பிடும் ஆற்றலை பெற்றிருக்கிறது. ஆனால் இது பெரும்பாலும் மறைந்து வாழும் குணம் கொண்டது.

  • வகுப்பு: பாலூட்டிகள்
  • குடும்பம்: குதிரை குடும்பம்
  • தொகுதி: முதுகுநாணிகள்
  • திணை: விலங்கு
  • ஆயுட்காலம்: 12 முதல் 17 வருடம்
  • ஆங்கில பெயர்: Leopard

இனபெருக்கம்:

சிறுத்தை 2 முதல் 3 வரையினை குட்டிகளை மட்டுமே ஈன்றுகிறது. சிலநேரத்தில் மட்டுமே 5 குட்டிகளை ஈன்றுகிறது. இதனுடைய கர்ப்பகாலம் என்பது வெறும் 90 முதல் 95 நாட்கள் ஆகும். 

மேலும் சிறுத்தைகளை குட்டிகளை தன்னுடைய குகைகளிலே வளர்த்து அதன் பிறகு சுமார் 10 அல்லது 12-வது மாதத்தில் தான் வெளியே விடுகிறது.

ஓடும் வேகம்:

காட்டு விலங்கு ஆகிய சிறுத்தை ஆனது 1 மணிநேரத்திற்கு 20 அடி முன்னேயும், 10 அடி மேலிருந்து நேராகவும் குதிக்கிறது. அதேபோல் இதனின் வேகம் என்பது 1 மணி நேரத்திற்கு தோராயமாக 58 கிலோ மீட்ட வரை இருக்கிறது.

கழுதை பற்றிய தகவல்கள்

சிறுத்தையின் உடல் அமைப்பு:

சிறுத்தையின் உடம்பு ஆனது 4 அடி நீளத்தினையும் அதனுடைய வால் ஆனது 2 முதல் 3 அடி நீளத்தினையும் கொண்டிருக்கும். மேலும் இதனுடைய தோல் 75 செ.மீ நீளத்தினையும், மொத்த எடையாக 35 கிலோ முதல் 54 கிலோ வரையிலும் எடையினை கொண்டிருக்கும்

இதனுடைய உடல்பில் இருக்கும் தோலில் உள்ள கோடுகள் ஆனது மிகவும் மெலிதாகவும், நெருக்கமாகவும் இருக்கும்.

இதனின் காதுகள் 5 மடங்கு மனிதர்களின் காதுகளை விட ஒளியினை உணரும் தன்மை கொண்டது.

சிறுத்தையின் வேறு பெயர்கள்:

  • பேந்தர்
  • லெப்பர்ட்

நீர்யானை பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்.. 

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil
Advertisement