Indian Bank Balance Check Number | Indian Bank Missed Call Balance Check Number 2024
ஹலோ நண்பர்களே..! பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவரும் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Indian Bank Balance Check Number பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நாங்களும் தினமும் இந்த பதிவில் வங்கிகள் பற்றிய தகவலை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நண்பர்களே இந்தியன் வங்கிக் கணக்கு இருப்பை எப்படி சரிபார்ப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..!
Indian Bank Balance Check Number in Tamil:
இந்தியன் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், ஒருவரின் கணக்கு இருப்பைச் சரிபார்ப்பது கட்டாயம். இது வாடிக்கையாளரின் நிதியைக் கண்காணிக்கவும் அவர்கள் எவ்வளவு செலவழித்துள்ளார்கள் மற்றும் அவர்களின் கணக்கில் மீதம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல், எந்தவொரு மோசடி நடவடிக்கையையும் கண்காணிக்கவும், அவர்களின் கணக்கில் இருந்து டெபிட் செய்யப்பட்ட பணத்தைக் கண்டறியவும் உதவுகிறது.
அதுபோல இந்தியன் வங்கியானது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு SMS Banking, Online Banking, App Support மற்றும் பல சேவைகளை வழங்குகிறது. மேலும் Missed Calls, SMS Banking, Apps, Online Portals அல்லது Internet Banking, Toll-Free Numbers மற்றும் ATM உட்பட, உங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்க பல்வேறு வழிகள் உள்ளன.
அதுபோல உங்கள் மொபைலில் வங்கி சேவைகளை நீங்கள் பெறுவதற்கு உங்கள் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்திருக்க வேண்டும்.
Indian Bank Balance Check Numbers | |
Indian Bank Balance Check Number (Toll-free) | 1800 4250 0000 |
SMS Banking | 94443-94443 |
Missed call | 8108781085 |
♦ இந்தியன் வங்கி வாடிக்கையாளர் தங்கள் இருப்பை அறிய 8108781085 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். மிஸ்டு கால் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று உங்களுக்கு ஒரு SMS வரும்.
♦ இந்தியன் வங்கி வாடிக்கையாளர் பராமரிப்பு துறையை தொடர்பு கொள்ள 1800 4250 0000 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
♦ மேலும் இந்தியன் வங்கி இப்போது SMS செய்திகளை அனுப்பவும் பெறவும் உங்களை அனுமதிக்கிறது. உங்கள் இருப்பைச் சரிபார்க்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் ஃபோனில் இருந்து 94443-94443 என்ற எண்ணுக்கு BALAVL என்று SMS அனுப்ப வேண்டும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |