Daily 3000 Earning Business in Tamil
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக அனைவருமே ஏதாவது ஒரு சுயத்தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதிலும் பெண்கள் கண்டிப்பாக ஒரு சுயதொழிலை செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. அதனால் தான் இன்றைய பதிவில் பெண்களுக்கு ஏற்ற ஒரு சுயதொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.
அது என்ன தொழில் என்றால் பழங்களை பயன்படுத்தி அனைவருக்குமே பிடித்த மிகவும் ருசியான ஜாம் தயாரிக்கும் தொழில் தான். இந்த ஜாம் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்த ஜாம் தொழிலை எவ்வாறு ஆரம்பிப்பது என்று விரிவாக காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில்..?
பொதுவாக நாம் போட்ட முதலீட்டை விட அதிக அளவு லாபம் மற்றும் Evergreen தொழில் என ஒரு சில தொழில்கள் இருக்கும். அப்படி உள்ள பல தொழில்களில் ஒன்று தான் உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில்.
அப்படி உணவு பொருட்களை தயாரித்துவிற்பனை செய்யும் தொழில் செய்பவர்களுக்கு நஷ்டமே ஏற்படாது. அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைருக்குமே மிகவும் பிடித்த ஒரு தொழில் தான் பழ ஜாமை நீங்கள் மிகவும் இயற்கையான முறையில் தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் அனைவருமே விரும்பி வாங்குவார்கள்.
அதனால் நீங்கள் கண்டிப்பாக இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும். இந்த ஜாமை நீங்கள் குறிப்பிட்ட பழவகையை பயன்படுத்தி தயாரிக்கலாம். அப்படியில்லையென்றால் அனைத்து பழவகைகளையும் பயன்படுத்தியும் தயாரித்து விற்கலாம்.
உங்க வாழ்க்கையை Top Level-க்கு எடுத்து செல்வதற்கு இந்த தொழில் தான் சரியாக இருக்கும்
தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பழங்கள், சர்க்கரை, தண்ணீர் மற்றும் Jam Packing Machine ஆகியவையே ஆகும். இந்த தொழிலுக்கு தோராயமாக 25,000 முதல் 50,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.
விற்பனை மற்றும் வருமானம்:
நீங்கள் பேக்கிங் செய்துவைத்துள்ள ஜாம்களை நீங்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விற்கலாம். கடைகளில் 500 கிராம் ஜாம் ரூபாய் 150 – 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நீங்கள் தோராயமாக ஒருநாளைக்கு 20 பாட்டில் 500 கிராம் ஜாம் பாட்டில்கள் விற்பனை செய்கிறீர்கள் என்றால் ரூபாய் 3000 – ரூபாய் 3600 வரை லாபம் பார்க்கலாம். இந்த ஜாம் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
என்றும் அழியாத இந்த தொழிலை செய்தால் தினமும் 3,000 சம்பாதிப்பது உறுதி
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |