Minimum Investment High Return Business in Tamil
இன்றைய காலகட்டத்தில் காலகட்டத்தில் நமக்கு தேவையான பணத்தை சமபாதிக்க கண்டிப்பாக அனைவருமே ஏதாவது ஒரு சுயத்தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் கண்டிப்பாக ஒரு சுயதொழிலை செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. அதனால் தான் இன்றைய பதிவில் பெண்களுக்கு ஏற்ற ஒரு சுயதொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.
அது என்ன தொழில் அதனை எவ்வாறு தொடங்குவது என்பதை எல்லாம் இன்றைய பதிவில் விரிவாக பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில்..?
என்றும் அழியாத தொழில் என்று சில தொழில்கள் உள்ளது. அப்படி உள்ள தொழில்களில் மிகவும் முக்கியமானது என்றால் அது உணவு தொழில் தான். அதாவது உணவு சம்மந்தப்பட்ட தொழிலை செய்தால் நமக்கு நஷ்டமே ஏற்படாது.
அப்படி தான் இன்றும் நாம் ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழிலை பற்றி தான் விரிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடித்த உணவு பொருட்களில் ஒன்று தான் பழ ஜாம்.
அதனால் நீங்கள் இந்த ஜாமை மிகவும் இயற்கையான முறையில் தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் அனைவருமே விரும்பி வாங்குவார்கள். அதன் மூலம் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
மாத சம்பளமெல்லாம் சும்மா உட்கார்ந்த இடத்திலேயே தினமும் 4000 வரை சம்பாதிக்கலாம்
தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த பழ ஜாம் தயாரிக்கும் தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பழங்கள், சர்க்கரை, தண்ணீர் மற்றும் Packing Machine ஆகியவையே ஆகும்.
இந்த தொழில் செய்வதற்கு தோராயமாக உங்களுக்கு 40,000 முதல் 50,000 ரூபாய் தேவைப்படும்.
தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:
இந்த தொழில் உணவு சம்மந்தபட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும். மேலும் இந்த பழ ஜாமை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.
மேலும் இந்த தொழிலை செய்வதற்கு உங்களின் வீட்டில் சுத்தமான சிறிய இடம் இருந்தாலே போதுமானது.
எந்தக்காலத்திலும் இந்த தொழிலுக்கான டிமாண்ட் குறையவே குறையாது தினமும் 4,000 வரை சம்பாதிக்கலாம்
தயாரிக்கும் முறை:
முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள உள்ள பழங்களை நன்கு சுத்தம் செய்து அதன் உள்ள தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு அதனுடைய சதைப்பகுதியை மட்டும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள பழத்தை சேர்த்து அதனுடன் தேவையான அளவு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு ஜாம் பதம் வரும் வரை நன்கு கலந்துகொள்ளுங்கள்.
இறுதியாக அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து இறக்கி கொள்ளுங்கள்.
வருமானம்:
நீங்கள் தயாரித்து வைத்துள்ள ஜாம்களை நீங்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விற்கலாம். கடைகளில் 500 கிராம் ஜாம் ரூபாய் 150 – 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நீங்கள் தோராயமாக ஒருநாளைக்கு இருபது 500 கிராம் ஜாம் பாட்டில்கள் விற்பனை செய்கிறீர்கள் என்றால் ரூபாய் 3000 – ரூபாய் 3600 வரை சம்பாதிக்கலாம்.
இந்த தொழிலுக்கான முதலீடு என்று பாரத்தால் குறைவு தான் ஆனா லாபம் லட்சக்கணக்கில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |