Hair Band Making Business
புதிதாக தொழில் தொடங்கும் அனைவருக்கும் அன்பு வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம், இந்த தொழிலை ஆண்கள் பெண்கள் இருபாலரும் வீட்டில் இருந்து இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். இந்த தொழிலுக்கு தேவைப்படும் இயந்திரத்தின் விலை 15000 ரூபாய் மட்டுமே, இந்த தொழிலுக்கான தயாரிப்பு விலை 80 பைசா மட்டுமே மேலும் இந்த தொழில் மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். சரி வாங்க அது என்ன தொழில் எவ்வளவு முதலீடு தேவைப்படும் போன்ற முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
என்ன தொழில்?
நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் ஹேர் பேண்ட் தயாரிப்பு தொழில் ஆகும். ஹேர் பேண்ட் பொறுத்தவரை பெண்கள் அதிகம் பயன்படுத்து பொருளாக உள்ளது. ஆக இந்த தொழிலை செய்தால் நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக்கும்.
இடம் வசதி:
இந்த தொழிலை தொடங்க தனியாக இடம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.. வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்களே வீட்டில் Free-ஆ இருக்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்து மாதம் 10,000 ரூபாய் சம்பாதியுங்கள்..
இயந்திரம்:
இந்த தொழிலுக்கு தேவைப்படும் இயந்திரம் Hair Band Making Machine ஆகும். இதனுடைய விலை 15000 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை நீங்கள் வெளி மாநிலங்களுக்கு நேரடியாக சென்று வாங்கலாம் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இயந்திரத்தை வாங்கும் போது அதனை எப்படி இயக்க வேண்டும் என்று அவர்களே பயிர்ச்சளிப்பார்கள்.
மூலப்பொருட்கள்:
இந்த தொழில் தொடங்க அவசியம் தேவைப்படும் மூலப்பொருள் என்னவென்றால் Hair Band Roll தான். இது தவிர தயார் செய்த ஹேர் பேண்டை பேக்கிங் செய்ய கவர் தேவைப்படும்.
முதலீடு:
இந்த தொழில் தொடங்க குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தேவைப்படும்.
வருமானம்:
இந்த தொழில் மூலம் மாதம் 30 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
சந்தை வாய்ப்பு:
நீங்கள் தயார் செய்த ஹேர் பேண்டை வளையல் மணி கடை, பியூட்டி பார்லர் போன்ற கடைகளில் விற்பனை செய்யலாம். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் விற்பனை செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாரம் 2,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |