Top 4 Business Ideas Under Rs.50,000
பொருளாதரம் அளவில் உலகில் வேகமாக வளர்ந்து வரும், நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும், மேலும் தங்களின் தொழில் முனைவோர் கனவை நிறைவேற்ற விரும்புவோருக்கு இது சரியான பதிவாக இருக்கும். நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்க தயராக உள்ளனர். இருப்பினும் வெற்றிகரமான வணிகத்திற்கு இரண்டு மிக முக்கியமான விஷயம் உள்ளன. அது வணிக யோசனை மற்றும் நிதியுதவி.
இருந்தாலும் உங்களுக்கு அதிக நிதி தேவைப்படாத பல வணிக யோசனைகளை உள்ளன. மேலும் நீங்கள் அந்த தொழிலை 50,000/- ரூபாய் உடன் தொடங்கலாம். இந்த பதிவில் உங்கள் கனவுகளை நனவாக்க உதவும் ஐந்து வெற்றிகரமான வணிக யோசனைகளை தெரிந்து கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
துணி கடை:
இந்தியாவில் மத, இன, மொழி பாகுபாடு இன்றி அனைத்து விதமான மக்களுக்கும் ஒன்றாக வாழும் நாடு. மேலும் நமது நாடு பண்டிகைகளின் நாடு என்றும் சொல்லலாம். ஆக புதிய ஆடைகள் இல்லாமல் எந்த ஒரு பண்டிகளையும் முழுமையடையாது.
அதுமட்டும் இல்லாமல் ஒருவருக்கு புதிய ஆடைகள் தேவைப்படும் பல சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே இங்கு ஆடைகளுக்கான தேவை குறையாது. அதனால் தான் இந்தியாவில் ஆடை வணிகம் மிகவும் பொலிவான வணிகங்களில் ஒன்றாக உள்ளது.
மேலும் இந்த ஆடை தொழிலை 50% லாபம் என்பது உறுதி. அதேபோல பாதுகாப்பாக வைத்தால் ஆடைகள் இருப்பு வைத்தாலும் ஓன்று ஆகாது. ஆக இரு சிறிய கடையாக வைத்து வெறும் 50000 ரூபாய்க்குள் ஆடை வணிகத்தை தொடங்குவது சிறந்த வணிக யோசனையாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2024-ன் ட்ரெண்டிங் business, லாபமும் கைநிறைய !
உணவு கடைகள்:
சிறிய முதலீட்டில் ஆரம்பிக்கக்கூடிய மற்றொரு தொழில் யோசனை உணவு கடை அல்லது உணவு வண்டிகளை தொடங்குவது. இது ஒரு செலவு குறைந்த வணிகம் ஆகும். ஒரு சிறிய உணவு கடையில் பரிமாற சப்ளையர்கள் தேவையில்லை. அதனால் வேலையாட்களின் சம்பளம் என்பது மிச்சமாகும்.
மேலும் கையேந்தி பவன் என்று செல்லமாக அழைக்கப்படும் Self Service முறையில் Table, Chair என எதுவும் தேவையில்லை. இதன் மூலம் நமக்கு கணிசமாக முதலீடு குறையும். உணவு டிரக் வணிகத்தில் ஒரு கூடுதல் சிறப்பு என்னவென்றால் அட்வான்ஸ் வடக்கை என்ற எந்த பிரச்சனையும் இருக்காது.
இந்த உணவு ட்ரக்குகள் பொதுவாக மொபைல் ஆகும். மேலும் இவை ஒரு நாளில் பல்வேறு இடங்களை உள்ளடக்கி தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துகிறது. இருப்பினும் உணவு டிரக் வணிகத்தில் ஒரு கூடுதல் செலவு இருக்கும் அது வாங்க பராமரிப்பு ஆகும்.
பயிற்சி மையம்:
எளிமையான வாங்க யோசனைகளில் ஒன்றாக இருக்கக்கூடியது, உங்களுடைய திறமைகளை மேம்படுத்தக்கூடியது, நீங்கள் எந்த விஷயத்தில் திறமையாக இருக்கின்றிர்களோ, அதனை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பது தான். பயிற்சி தேவையை நீங்கள் தொடங்குவதற்கு பெரிய அளவில் முதலீடு என்பது தேவைப்படாது.
கற்பிப்பது என்றால் அதற்கு பெரிதாக படித்து தான் இருக்க வேண்டும் என்றால் எந்த இரு அவசியமும் இல்லை. தையல் கலை, ஓவியம், நீச்சல், செஸ், கேரம், இசை, நடனம், பிற மொழிகள் என்று உங்களுக்கு எது தனித்துவமாக தெரியுமோ அதனை மக்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
இந்த தொழிலுக்கு தேவையானது உங்கள் வணிகத்தை அமைக்கக்கூடிய ஒரு அறை மட்டுமே. மேலும் Youtube மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆன்லைனில் கற்றுக்கொடுக்கலாம். இதனை சிறிய முதலீட்டில் தொடங்குங்கள் எதிர்காலத்தில் உங்கள் வணிகத்தை படிப்படியாக உயர்த்தலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் அதிக அளவில் விற்பனை ஆகும் பொருள்.. எல்லா சீசனிலும் கொடி கட்டி பறக்கும் தொழில்..!
Function organizer:
ஒரு வெற்றிகரமான வணிகத்தை தொடங்குவதற்கு மற்றொரு வழி திட்டமிடுதல். அதாவது வீட்டை கட்டி பார், கையானதை செய்து பார் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் அல்லவா. அந்த ஒரு பழமொழி போதும் ஒரு திருமணத்தை நடத்துவதில் இருக்கும் சிரமத்தை சொல்வது.
இன்றைய அவசர காலகட்டத்தில் யாருக்கும் நேரம் இருப்பதில். எனவே ஒரு திருமணத் திட்டமிடுபவர் அல்லது நிகழ்வு மேலாளராக மாறுவது, உங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மிகவும் ஆக்கப்பூர்வமாக ஒரு நிகழ்வைத் திட்டமிடுவது ஒரு சிறந்த தொழிலாக அமையும்.
இந்த வணிகத்திற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் பணம் தேவைப்படும். ஆனால் உங்கள் வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெற்றுவிட்டால் அதன் பிறகு இந்த வணிகத்தின் வருமானம் பெரியதாக இருக்கும். பின்னர் உங்கள் வணிகத்தை வெவ்வேறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தலாம்.
மேலும் இந்த தொழில் கேட்டரிங், புகைப்படம் எடுத்தல், அலங்கரித்தல் போன்ற பல வணிக வாய்ப்புகளை உள்ளடையதாக இருந்தால் நல்ல வருமானம் கிடைக்கும். அதற்கு மேலாக வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி உங்களுக்கு ஒரு மனநிறைவையும் தரும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |