காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. பாடல் வரிகள்..!

Advertisement

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே சாங்

பாடல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.. நம் அனைத்து சூழ்நிலைக்கும் ஏற்றவாறு பாடல்கள் ஏராளமாக உள்ளது. நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி நம் மனதை அமைதிப்படுத்த பாடல் ஒன்றே சரியான தீர்வாக அமையும். பாடலில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாடல் வரிகள் பிடிக்கும். அதிலும் குறிப்பாக 2K பிள்ளைகள் கூட 90’s பாடல்களை தான் விரும்பி கேட்பார்கள். எனவே நீங்களும் 90’s பாடல்களை விரும்புபவராக இருந்தால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள காதல் ரோஜாவே பாடல் வரிகளை பாடி மகிழுங்கள்.

Kadhal Rojave Enge Nee Enge Song Lyrics in Tamil:

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே சாங்

காதல் ரோஜாவே பாடல் பற்றிய குறிப்புகள்:

படத்தின் பெயர்: ரோஜா 

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடகர்கள்: சுஜாதா மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்

வாடி என் தங்க சேல பாடல் வரிகள் ..

Kadhal Rojave Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…

ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…

ஆண் : கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண்மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீதான்…
என்னானதோ ஏதானதோ… சொல் சொல்…

ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…

—BGM—

பெண் : லலல லலலால லலலா…
லலல லலலால லலலா…
லலலா லலா லல லல லலலா…
லலலா லலா லல லல லலலா…

—BGM—

ஆண் : தென்றல் என்னை தீண்டினால்…
சேலை தீண்டும் ஞாபகம்…
சின்ன பூக்கள் பார்க்கையில்…
தேகம் பார்த்த ஞாபகம்…
வெள்ளி ஓடை பேசினால்…
சொன்ன வார்த்தை ஞாபகம்…
மேகம் ரெண்டு சோ்கையில்…
மோகம் கொண்ட ஞாபகம்…

ஆண் : வாயில்லாமல் போனால்…
வார்த்தையில்லை பெண்ணே…
நீயில்லாமல் போனால்…
வாழ்க்கையில்லை கண்ணே…
முள்ளோடு தான் முத்தங்களா… சொல் சொல்…

ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…

ஆண்: கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண்மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீதான்…
என்னானதோ ஏதானதோ… சொல் சொல்…

—BGM—

ஆண் : வீசுகின்ற தென்றலே…
வேலையில்லை நின்று போ…
பேசுகின்ற வெண்ணிலா…
பெண்மையில்லை ஓய்ந்து போ…
பூ வளா்த்த தோட்டமே…
கூந்தலில்லை தீா்ந்து போ…
பூமி பார்க்கும் வானமே…
புள்ளியாக தேய்ந்து போ…

ஆண் : பாவையில்லை பாவை…
தேவையென்ன தேவை…
ஜீவன் போன பின்னே…
சேவை என்ன சேவை…
முள்ளோடு தான் முத்தங்களா… சொல் சொல்…

ஆண் : காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…

ஆண் : கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண்மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீதான்…
என்னானதோ ஏதானதோ… சொல் சொல்…

—BGM—

N.G.K திரைப்படத்தின் அன்பே பேரன்பே பாடல் வரிகள்..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement