கடலில் வாழும் மீன்களின் உடம்பில் ஏன் உப்பு தங்குவதில்லை காரணம் தெரியுமா..?

Why Are Fish Not Salty in Tamil 

Why Are Fish Not Salty in Tamil 

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இறைச்சி என்று சொன்னாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதிலும் மீனை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுபோல கடலில் வாழும் மீனின் உடம்பில் ஏன் உப்பு தங்குவதில்லை. அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

நல்ல மீன் எது? பழைய மீன் எது? என்று பார்த்து வாங்குவது எப்படி? இந்த விஷயத்தை மட்டும் தெரிந்திக்கோங்க போதும்..!

மீனின் உடம்பில் ஏன் உப்பு தங்குவதில்லை:

why do salt water fish not taste salty in tamil

மீனின் வாழ்விடம் நீர் என்று நம் அனைவருக்குமே தெரியும். மீன் ஆறு, குளம், ஏரி மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் வாழ்கிறது.

கடல் நீர் உப்பாக இருக்கும் என்று நமக்கு தெரியும். அதே நேரம் மீனும் கடலில் தானே வாழ்கிறது. அது ஏன் உப்புக் கரிக்கவில்லை என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும்.

உப்பு நிறைந்த கடலில் மீன்கள் வாழ்ந்தாலும், உப்பின் தாக்கம் உடலுக்குள்  செல்லாமல் தடுக்கும் பண்புகள் மீன்களிடம் இருக்கின்றன.

மனிதன் மற்றும் சில வகையான பாலூட்டி உயிரினங்கள் நுரையீரலால் சுவாசிக்கின்றன. ஆனால் மீன்கள் அப்படி கிடையாது. காரணம் மீன்கள் நீரில்  வாழ்வதால் அவை செவுள்களால் தான் சுவாசிக்கின்றன.

 மீன்கள் வாயால் நீரை உறிஞ்சி செவுள்கள் வழியாக நீரை வெளியேற்றுகின்றன. அப்படி நீரை வெளியேற்றும் போது, செவுள் பகுதியில் இருக்கும் ஏராளமான நாளங்கள் நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனை மட்டும் உறிஞ்சி உடலுக்குள் அனுப்புகின்றன.  

அதுபோல செவுள்கள் வழியாக நீரை வெளியேற்றும் போது மீனின் உடலில் இருக்கும் உப்பு கழிவுகளாக வெளியே வந்துவிடுகிறது.

இதன் காரணமாக தான் மீன்களின் உடலில் உப்பு தங்குவதில்லை.

மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்..!

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts