Why Do Police Officers Take Their Cap When Someone Has Died in Tamil
இறப்பு என்பது இயற்கையானது. அது யாருக்கு எப்படி வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. அது எதிர்பாராத விபத்து போல் வந்துவிடும். அப்படி இருக்கும் போது ஒருவர் இறக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அனைவரும் செல்வார்கள்.
இன்னும் சிலர் வீட்டிற்கு சென்று மாலை மரியாதை வரை செய்து அவர்களின் ஆன்மா நிம்மதியாக செல்ல வேண்டும் என்று பிராத்தனை செய்து அவர்களை வணங்கி வருவார்கள். மேலும் பதிவை முழுவதுமாக படியுங்கள் நீங்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கும்.
Why Do Police Officers Take Their Cap When Someone Has Died in Tamil:
இறப்பு இயற்கை அதில் ஒரு சிலர் இறந்தாலும் அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் கண்களில் கண்ணீர் வந்துவிடும். அதனை நினைத்து நாம் அவர்களுடன் இருந்து வந்த நாட்களை நினைத்து அழுகிறோம்.
இறந்த வீட்டிற்கு வரும் அனைவருமே இறந்தவர்களின் பக்கத்தில் இருந்ததில்லை. ஆனாலும் சடங்கு வீடுகளுக்கு சென்றால் அழுபவர்களின் இடத்தில் தங்களை வைத்து அவர்களுடன் சேர்ந்து நாமும் அழுவோம். இது சாதாரணமாக அனைவரின் வீட்டிலும் நடப்பது தான்.
ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..?
ஆனால் போலீஸ்காரர்கள் இறந்தவர்களை பார்த்தாலோ அல்லது அவர்களுக்கு செய்தி சொல்லும் போதும் அவர்கள் தலையில் உள்ள தொப்பியை கழட்டுவார்கள். அதை ஏன் அப்படி செய்ய வேண்டும் இதற்கு என்ன காரணம் தெரியுமா?
காவல் அதிகாரிகள் அந்த உடையை அணிந்திருக்கும் போது அவர்களுடைய இன்ப துன்பம், அவர்களுக்கு உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கம்பீரமாக அவர்களின் பணிகளுக்கு மரியாதை செலுத்துவார்கள்.
ஆனால் அதே சமயம் இறந்தவர்களை பார்க்கும் போது அவர்களின் தலையில் இருக்கும் தொப்பியை கழட்டினால் அவர்கள் சராசரியான மனிதனாக மாறி இறந்த உடலுக்கும் அவர்களின் குடும்பத்திற்கு மரியாதையை கொடுப்பார்கள்.இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் ஏன் குளிக்க வேண்டும்..?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |