Can We Take Bath After Visiting Temple
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் அனைவருமே கோவிலுக்கு செல்வோம். இந்து சமயத்தில் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வந்து குளிக்க கூடாது என்று சொல்வார்கள். ஏன் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூட இப்படி சொல்லி நாம் கேட்டிருப்போம். சரி ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசிப்பவர்கள் இந்த பதிவை படித்து அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!
கோவிலில் பெண்கள் ஏன் குருக்களாக இல்லை..? அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..? |
கோவிலிலிருந்து வந்து ஏன் குளிக்க கூடாது..?
நம் முன்னோர்கள் பல ஆன்மீக விஷயங்களை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்லிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அதுபோல தான் இதற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.
நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வந்தால் குளிக்க கூடாது என்று சொல்வார்கள். இன்னும் சிலர் கை கால்களை கூட கழுவ விட மாட்டார்கள்.
ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று அவர்களிடம் காரணம் கேட்டால், அதற்கு அவர்கள் குளித்தாலோ அல்லது கால்களை கழுவினாலோ நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறாது என்று சொல்வார்கள். ஆனால் இது உண்மை காரணம் கிடையாது.
இதையும் பாருங்கள் –> கோவிலில் மணி அடிப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?
ஒரு மனிதனின் உடலில் நூற்றுக்கணக்கான நரம்புகள் இருக்கின்றன. மனித உடலில் தலையில் தொடங்கி பாதம் வரை நரம்புகளால் பின்னப்பட்டவை. அதுபோல இந்து சமய கோவில்கள் அனைத்தும் செங்கற்கள் மற்றும் காரை கற்களால் கட்டப்பட்டவை.இந்த கற்கள் நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் பண்புகளை கொண்டுள்ளன. அதுபோல இந்து சமயத்தில் கோவிலுக்கு செல்லும் போது செருப்பில்லாமல் தான் கோவிலுக்குள் செல்வார்கள். அப்படி செல்லும் போது கோவிலில் இருக்கும் ஆற்றலானது நம் பாதத்தின் வழியாக உடலுக்கு செல்கிறது.
இந்த ஆற்றலானது உடலுக்குள் சென்று நேர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த ஆற்றல் உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது.
அதுபோல நாம் கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் குளித்தால் அந்த ஆற்றல் நம் உடலில் இருந்து நீங்கிவிடும். அதனால் தான் குளிக்க கூடாது என்றும் கால்களை கழுவ கூடாது என்றும் சொல்கிறார்கள். அதேபோல கோவிலில் இருந்து நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்கு காரணமும் இது தான்.
கோவிலில் சாமி வந்தது போல் ஆடுவதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா ? |
கோவிலில் ஏன் தேங்காய் உடைக்கிறார்கள் காரணம் தெரியுமா..? |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |