டாட் காம் (.Com) -யை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Who Invented .Com in Tamil

வணக்கம் நண்பர்களே..! நம்மில் பலருக்கும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கும். அதேசமயம் எப்படி தினமும் ஒரு தகவலை தெரிந்து கொள்வது என்று யோசிப்பீர்கள். ஆனால் ரொம்ப யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு தான் எங்கள் பொதுநலம் பதிவு உள்ளதே..! உங்களுக்கு உதவும் நோக்கத்தில் தினமும் எங்கள் பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று .COM -யை கண்டுபிடித்தவர் யார் என்று தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

நாம் அனைவருமே .COM என்பதை பல அறிந்து இருப்போம். ஆனால், அது எப்படி வந்தது அதனை கண்டுபிடித்தது யார் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Who Invented .Com in Tamil பற்றி கொடுத்துள்ளோம். படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

.Com என்றால் என்ன..? 

.Com என்றால் என்ன

.Com என்றதும் உங்கள் நினைவிற்கு எங்கள் Pothunalam.Com பதிவு வரும் என்று நினைக்கின்றேன். இதுபோல பலவற்றிற்கு .Com என்பது இடம் பெறுகிறது. சரி நாம் அனைவருமே www.com என்பதை படத்திலும் பல இடங்களிலும் சொல்லி கேட்டிருப்போம்.

அப்படி கேட்கும் போது இந்த .Com -யை கொண்டு வந்தது யார் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதை பற்றி இங்கு காண்போம் வாங்க.

கணினியை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா

.Com என்றால் என்ன

.Com என்பது இணையத்தில் பயன்படுத்தும் டொமைன் பெயர் அமைப்பு ஆகும். ஜனவரி 1985 ஆம் ஆண்டு இணையத்தில் பயன்படுத்த, டொமைன் பெயர் அமைப்பு முதன் முதலில் செயல்படுத்தப்பட்டபோது .com முதல் உயர்மட்ட டொமைன்களில் ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இது .காம் (.Com) டிஜிட்டல் புரட்சியின் மையமாக இருந்து வருகிறது. இது மக்கள் வேலை செய்யும், வாழும், விளையாடும் மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருக்கும் விதத்தை மறுவடிவமைத்துள்ளது.

👉கட், காப்பி, பேஸ்ட் (Cut Copy Paste) கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

.Com கண்டுபிடித்தவர் யார்..? 

.Com கண்டுபிடித்தவர் யார்

 

முதன் முதலில் .Com மார்ச் 15, 1985 ஆம் ஆண்டு சிம்பாலிக்ஸ், இன்க் எனப்படும் கணினி உற்பத்தியாளரால் கோரப்பட்டது. இதற்கு முன்னர் இணையம் என்பது ஆராய்ச்சி மற்றும் தகவல்தொடர்புக்கு நெட்வொர்க்கைப் பயன்படுத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கணினி விஞ்ஞானிகளால் இயக்கப்படும் திட்டமாக இருந்தது.

1969 ஆம் ஆண்டு RFC எடிட்டராக போஸ்டலும் அவரது சகாக்களும் தனிப்பட்ட முறையில் இணையத்தை இன்று நாம் பயன்படுத்துவது போல் வடிவமைத்தனர். அதன் பிறகு அக்டோபர் 1984 ஆம் ஆண்டு RFC 920 “ARPA- இன்டர்நெட் மற்றும் DARPA ஆராய்ச்சி சமூகத்தில் ஒரு புதிய டொமைனை நிறுவுவதற்கான தேவைகள்” வெளியிடப்பட்டது. இது .Com இன் பிறப்பிற்கான களத்தை அமைத்தது.

நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

கொலராடோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கணினி அறிவியல் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் கிரேக் பார்ட்ரிட்ஜ் கருத்துப்படி, கணினி உருவாக்கப்பட்டதால் டொமைன்களுக்கான பெயர் உருவானது. ஆனால் முதலில் .Cor நிறுவனங்களுக்கான டொமைனாக முன்மொழியப்பட்டது. ஆனால் இறுதிப் பதிப்பு வெளிவந்தபோது அது .Com க்கு மாற்றப்பட்டது.

இப்படி தான் .Com கொண்டு வரப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement