கண்ணைத் திறந்து கொண்டே தூங்கும் உயிரினம் எது தெரியுமா..?

Advertisement

Which Creature Sleeps With Both Eyes Open in Tamil

இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதமான படைப்புகளில்  உள்ளன. ஒவ்வொரு உயிரினத்தின் வினோதமான செய்லபாடுகளுமோ நமக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. அதாவது கண் இல்லாத உயிரினம், தலை இல்லாத உயிரினம், என பலவற்றை கேட்டு இருப்போம். அதே போல் கண்ணை திறந்து கொண்டே தூங்கும் உயிரினமும் இவ்வுலகில் இருக்கிறது. கேட்கவே ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..!ஆமாங்க கண்ணைத் திறந்து கொண்டே தூங்கும் உயிரினம் ஒன்று இருக்கிறது. அவற்றை பற்றி தான்  இப்பதிவில் பார்க்க போகிறோம்.

கண்ணைத் திறந்து கொண்டு தூங்கும் உயிரினம்:

 கண்ணை திறந்து கொண்டு தூங்கும் உயிரினம்

இந்த உலகில் நிறைய உயிரினங்கள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் கண்டு நாம் அவ்வளவு பயந்து இருக்க மாட்டோம். ஆனால் நாம் அனைவருமே பார்த்து பயந்து போவது பாம்பு தான். இந்த பாம்புகள் ஊர்வன இனத்தை சார்ந்தது. அவற்றின் நீளமான உடலமைப்பை பார்த்தாலே அனைவருக்கும் பயமாக இருக்கும்.

 அப்படிப்பட்ட இந்த பாம்புகள் தான் கண்ணை திறந்துக்கொண்டே தூங்குகின்றன. இது முற்றிலும் உண்மையான விஷயம். பாம்புகள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்கும் போது  தனது உடலை சுருட்டி கொண்டு கண்ணை மட்டும் முழுவதுமாக திறந்து வைத்து தூங்குகின்றன. 
வீட்டிற்குள் பாம்பு வராமல் இருக்க இதை செய்துடுங்கள்.!

 

பாம்பின் உடலமைப்பு:

 கண்ணை திறந்து கொண்டு தூங்கும் உயிரினம்

பாம்பின் தோலானது ஒரு செதில்களால் மூடப்பட்டிருக்கும். இந்த பாம்புகள் அவற்றின் தோலை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உரித்து விடுகின்றன. பாம்பிற்கு பெரும்பாலும் 200 முதல் 400 வரையிலான முதுகெலும்புகள் உள்ளன. பெரும்பாலான பாம்புகளில் எலும்பு கூடு என்பது அவற்றின் மண்டை ஓடு, முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகளே ஆகும்.

உலகில் பாம்புகளே இல்லாத நாடு எது உங்களுக்கு தெரியுமா..?

 

பாம்பின் உணவுகள்:

ராஜநாகம் பாம்பை தவிர மற்ற பாம்புகள் அனைத்தும் சிறு விலங்குகள் மற்றும் ஊர்வன, எலி,  போன்றவற்றை உணவாக எடுத்து கொள்கின்றன. ஆனால் ராஜநாகம் பாம்பினம் மட்டும் மற்ற பாம்புகளை மட்டுமே உணவாக உட்கொள்கின்றன.

பாம்பின் இனப்பெருக்கம்:

பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் தன்மை உடையவை. ஆனால் விரியன் போன்ற சில பாம்புகள் மட்டும் குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.. பாம்புகளில் குருட்டு பாம்புகள் மட்டுமே ஆண் பாம்பு இல்லாமல் கருவடைகிறது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil

 

Advertisement