கருப்பு உலர் திராட்சை தீமைகள் | Black Dry Grapes Side Effects in Tamil..!

black dry grapes side effects in tamil

கருப்பு உலர் திராட்சை தீமைகள் | Black Dry Grapes Side Effects in Tamil..!

அனைவருக்கும் முந்திரி, திராட்சை என்பது பிடிக்கும். அதிலும் சிலர் ஒரு நாள் கூட தவறாமல் முந்திரி மற்றும் திராட்சையினை சாப்பிட்டு வருவார்கள். அதுமட்டும் திராட்சையின் சுவையும் மென்று சாப்பிடுவதற்கு நன்றாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதுபோல நிறைய சத்துக்களும் இந்த கருப்பு உலர் திராட்சையில் அடங்கியுள்ளது. என்ன தான் சத்துக்கள் நிறைய அடங்கியதாக இருந்தாலும் கூட எதையும் அளவோடு சாப்பிடுவதே நல்லது. அதனால் கருப்பு உலர் திராட்சையினை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ பச்சை திராட்சை நன்மைகள்

உலர் திராட்சை சத்துக்கள்:

 உலர் திராட்சை சத்துக்கள்

  • கார்போஹைட்ரேட்- 80 கிராம்
  • வைட்டமின் B1- 0.008 மி.கி
  • வைட்டமின் B2- 0.191 மி.கி
  • வைட்டமின் B3- 1.14 மி.கி
  • வைட்டமின் B6- 0.323 மி.கி
  • வைட்டமின் C- 3.2 மி.கி
  • வைட்டமின் E- 0.12 மி.கி
  • துத்தநாகம்- 0.37 மி.கி
  • புரதம்- 3.28 கிராம்
  • கொழுப்பு- 0.2 கிராம்
  • நார்சத்து- 3.3 கிராம் 
  • இரும்புசத்து- 0.98 மி.கி
  • பாஸ்பரஸ்- 101 மி.கி
  • கால்சியம்- 64 மி.கி
  • சர்க்கரை- 65.7 கிராம்
  • பொட்டாசியம்- 746 கிராம் 

மேலே சொல்லப்பட்டுள்ள சத்துக்கள் இல்லாமல் மற்ற சில சத்துக்களும் 100 கிராம் கருப்பு உலர் திராட்சையில் அடங்கியுள்ளது.

உலர் திராட்சை தீமைகள் 

 கருப்பு உலர் திராட்சை தீமைகள்

கருப்பு உலர் திராட்சையினை அளவுக்கு அதிகாமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பது பற்றி விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வயிற்று வலி:

கருப்பு உலர் திராட்சையினை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதனால் வயிறு சம்மந்தப்பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதாவது வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற பின் விளைவுகளை ஏற்படுத்துவதோடு சிலருக்கு காய்ச்சலையும் வரச் செய்கிறது.

உடல் எடை அதிகரிப்பு:

பல வகையான சத்துக்கள் உலர் திராட்சையில் அடங்கி இருப்பதால் இதனை நாம் அதிகாமாக சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடல் எடையினை விரிவாக அதிகரிக்க செய்கிறது.

திராட்சை பழம் நன்மைகள்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு:

நாம் சாப்பிடும் திராட்சையில் குளுக்கோஸ், பிரக்டோஸ், மால்டோஸ் போன்ற சர்க்கரைகள் உள்ளது. ஆகவே திராட்சையினை நாம் நிறைய சாப்பிடும் போது இதில் உள்ள சர்க்கரை ஆனது நம்முடைய உடலில் இயல்பாகவே இரத்த சர்க்கரையின் அளவினை அதிகரிக்க செய்கிறது.

சுவாச பிரச்சனை:

அதுபோலவே கருப்பு உலர் திராட்சையினை அதிகமாக சாப்பிடுவதனால் சிலருக்கு சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையினை ஏற்படுத்துகிறது. அதாவது மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை:

நார்சத்து ஆனது 100 கிராம் கருப்பு உலர் திராட்சையில் 3.3 கிராம் இருப்பதால் இதனை நாம் சரியான அளவில் தான் சாப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்ச்னையை ஏற்படுத்தும்.

இந்த ஒரு பொருளில் இவ்வளவு நன்மைகளா..  கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா.. 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்