காணி நிலம் ஆறாம் வகுப்பு வினா விடை | Samacheer Kalvi 6th Tamil Guide

Kaani Nilam Book Back Answers

காணி நிலம் வினா விடை | Kaani Nilam Book Back Answers

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 2 புத்தகத்தில் இடம்பெற்றுள்ள காணி நிலம் பாடத்தில் இருக்கும் வினா விடைகளை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம். ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பேட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

*** காணி நிலம் வேண்டும் பாடல் வரிகள்..!

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

காணி நிலம் வேண்டும் பாடல் ஆசிரியர்: மகாகவி பாரதியார்.6th Standard Tamil Book 1st Term Lesson 2.2

I. சொல்லும் பொருளும்

 • காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
 • மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
 • சித்தம் – உள்ளம்.

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் __________________

 • ஏரி
 • கேணி
 • குளம்
 • ஆறு

விடை: கேணி

2. சித்தம் என்பதன் பொருள் _____________________

 • உள்ளம்
 • மணம்
 • குணம்
 • வனம்

விடை: உள்ளம்

3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் _________________

 • அடுக்குகள்
 • கூரை
 • சாளரம்
 • வாயில்

விடை: அடுக்குகள்

4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________________

நன் + மாடங்கள்
நற் + மாடங்கள்
நன்மை + மாடங்கள்
நல் + மாடங்கள்

விடை: நன்மை + மாடங்கள்

5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________________

 • நிலம் + இடையே
 • நிலத்தின் + இடையே
 • நிலத்து + இடையே
 • நிலத் + திடையே

விடை: நிலத்தின் + இடையே

6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

 • முத்துசுடர்
 • முச்சுடர்
 • முத்துடர்
 • முத்துச்சுடர்

விடை: முத்துச்சுடர்

7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

 • நிலாஒளி
 • நிலஒளி
 • நிலாவொளி
 • நிலவுஒளி

விடை: நிலாவொளி

III. பொருத்துக:

1. முத்துச்சுடர்போலதென்றல்
2. தூய நிறத்தில்நிலாஒளி
3. சித்தம் மகிழ்ந்திடமாடங்கள்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

IV. நயம் அறிக.

1. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

முத்து – முன்பு
த்து –க்கத்திலே
ங்கு – ந்த
நிறத்தினதாய் – நிலத்திடையே

2. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை ச் சொற்களை எடுத்து எழுதுக.

 • காணி – கேணி
 • தென்றல் – நன்றாய்
 • ன்னிரண்டு – தென்னைமரம்
 • த்து – சித்தம்

V. குறுவினா

1. காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?

விடை: காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.
அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும்.

நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும்.

இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும்.

காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று பாரதியார் வேண்டுகிறார்

2. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.

விடை: பாரதியார் ஒர் இயற்கை கவிஞர் ஆவார். அவருடைய பாடல்களில் அதிகம் இயற்கை வர்ணனைகளே இடம் பெற்றிருக்கும்

“நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
காக்கை குருவி எங்கள் கூட்டம்”…

என்று பல பாடல்களை பாடி இருப்பதன் மூலம் அவரது இயற்கை வெளிப்பாடு தெரிகிறிது.

எந்தவொரு கவிஞனும் இயற்கையோடு ஒன்றிருக்காவிடில் கவிதையை இயற்ற முடியாது. அந்த அளவிற்கு இயற்கை, கவிஞனுக்கு கவிதைகளை அள்ளித் தெளிக்கிறது. அப்படி இருக்கும்போது பாரதிக்கு இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பமானது புதிதல்ல்.

பாரதியார் தன் வாழ்வை இயற்கையோடே அமைத்து கொண்டார். அவர் தன் பார்வையில் பட்ட அனைத்துப் பொருட்களையும் இயற்கையாகவே கண்ணுற்றார். அது மட்டுமல்லாமல் அவர் பாடாத இயற்கை பொருட்களே இல்லை.

இயற்கையோடே வாழவும் கற்றுக் கொண்டார். வாழ்ந்தும் காட்டியவர் அவர் இயற்றிய காணிநிலம் பாடலில் கூட, காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.

அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும்.

இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும்.

காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று போல பாரதியார் பாடியுள்ளார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது பாரதியார் இயற்கையின் மீது பராசக்தியிடம் கொண்டுள்ள விருப்பம் வெளியிடப்படுகிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide – காணி நிலம் கூடுதல் வினா விடை 

I. சேர்த்து எழுதுதல்

 • இளமை + தென்றல் – இளந்தென்றல்
 • பத்து + இரண்டு – பன்னிரண்டு

II. கோடிட்ட இடங்களை நிரப்புதல்

1. பாரதியாரின் இயற்பெயர் ________________

விடை: சுப்பிரமணியன்

2. எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர் ________________

விடை: பாரதியார்.

3. பாரதியார் ________________, ________________, ________________ நூல்களை இயற்றி உள்ளார்.

விடை: பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு

III. பொருத்துக

1. தூண்முத்துச்சுடர்
2. மாடம்அழகு
3. நிலா ஒளிதூயநிறம்
விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ

 

ஆறாம் வகுப்பு சிலப்பதிகாரம் வினா விடை | 6th Tamil Book Back Questions and Answers
6th Tamil Book Back Questions and Answers Term 1

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com