ஆறாம் வகுப்பு தமிழ் சிறகின் ஓசை | 6th Standard Tamil Book 1st Term Question and Answer

Advertisement

ஆறாம் வகுப்பு தமிழ் சிறகின் ஓசை வினா விடைகள் – 6th Standard Tamil Book 1st Term Lesson 2.3 Question and Answer

சிறகின் ஓசை வினா விடைகள்:- பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் பருவம் 1 இயல் 2 இடம்பெற்றுள்ள சிறகின் ஓசை பாடத்தில் இருக்கும் வினா விடைகளை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம். ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பேட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிறகின் ஓசை சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ______.

  • தட்பம் + வெப்பம்
  • தட்ப + வெப்பம்
  • தட் + வெப்பம்
  • தட்பு + வெப்பம்

விடை: தட்பம் + வெப்பம்

2. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _______

  • வேதி + யுரங்கள்
  • வேதி + உரங்கள்
  • வேத் + உரங்கள்
  • வேதியு + ரங்கள்

விடை: வேதி + உரங்கள்

3. தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  • தரையிறங்கும்
  • தரைஇறங்கும்
  • தரையுறங்கும்
  • தரைய்றங்கும்

விடை: தரையிறங்கும்

4. வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______.

  • வழிதடம்
  • வழித்தடம்
  • வழிதிடம்
  • வழித்திடம்

விடை: வழித்தடம்

5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _______

  • துருவப்பகுதி
  • இமயமலை
  • இந்தியா
  • தமிழ்நாடு

விடை: துருவப்பகுதி

II.கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ______________

விடை: ஆர்டிக் ஆலா

2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ______________

விடை: சத்திமுத்தப் புலவர்

3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ______________ என்று பெயர்.

விடை: வலசைபோதல்

4. இந்தியாவின் பறவை மனிதர் ______________

விடை: டாக்டர் சலீம் அலி

5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று _____________________

விடை: தட்ப வெப்பநிலை மாற்றம்

III. சொற்றொடர் அமைத்து எழுதுக.

1. வெளிநாடு

விடை: ராமு வேலைக்காக வெளிநாடு சென்றான்.

2. வாழ்நாள்

விடை: சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகள்

3. செயற்கை

விடை: செயற்கை உரங்களால் பறைவகள் அழிகின்றன

IV. பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக.

  1. மரங்களை வளர்த்து இயற்கையைக் காப்போம். செயற்கை உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். (செயற்கை / இயற்கை)
  2. வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் மிகுந்துள்ளது. தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)

V. சிறகின் ஓசை குறுவினா

1. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

விடை: உணவு, இருப்பிடம், தட்பவெப்நிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகப் பறவைகள் இடம் பெயர்கின்றன.

2. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

விடை: வலசையின்போது பறவையின் தலையில் சிறகு வளர்தல், இறகுகளின் நிறம் மாறுதல், உடலில் கற்றையாக முடி வளர்தல் (ஒருவகைப் பறவையை வேறு வகைப் பறவை என்று கருதும் அளவிற்குக்கூட சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.) போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது

VI. சிறகின் ஓசை சிறுவினா

1. சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.

விடை: சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.
கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும்
வாழ்கின்றன .

இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில்
4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.

தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும்.

சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும்.

சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.

சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும்.

2. வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?

விடை: பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன;
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை ‘வலசைபோதல்’ என்பர். நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.

பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.

சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும், வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.

பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.

வலசையின்போது பறவையின் தலையில் சிறகு வளர்தல், இறகுகளின் நிறம் மாறுதல், உடலில் கற்றையாக முடி வளர்தல் (ஒருவகைப் பறவையை வேறு வகைப் பறவை என்று கருதும் அளவிற்குக்கூட சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.) போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது.



சிறகின் ஓசை வினா விடைகள்

I. பிரித்தெழுதுக

  1. பெருங்கடல் = பெருமை + கடல்
  2. செங்காேல் = செம்மை + காேல்
  3. வடதிசை = வடக்கு + திசை
  4. இளந்தளிர் = இளமை + தளிர்
  5. பறவையினம் – பறவை + இனம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. “நாராய் நாராய்” எனத்தாெடங்கும் பாடலை எழுதியவர் __________________

விடை: சத்திமுத்தப்புலவர்

2. உலகச் சிட்டுக் குருவிகள் நாள் __________________

விடை: மார்ச் 20

3. __________________ பெரும்பாலும் வலசை போகின்றன.

விடை: நீர்வாழ் பறவைகளே

4. ஆண் குருவியின் தாெண்டைப் பகுதி __________________ இருக்கும்.

விடை: கறுப்பு நிறத்தில்

5. சிட்டுக்குருவி __________________ நாள்கள் அடைகாக்கும்.

விடை: பதினான்கு

6. டாக்டர் சலீம் அலியின் தன்வரலாற்று நூலுக்குப் பெயர் __________________

விடை: சிட்டுக் குருவியின் வீழ்ச்சி.

7. ஆர்டிக் ஆலா __________________ பயணம் செய்யும் பறவையினமாகும்

விடை: 22,000 கி.மீ

8. __________________ – என்று பாரதியார் பாடினார்

விடை: ‘காக்கைகுருவி எங்கள் சாதி’

9. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது __________________.

விடை: தமிழ்நாடு

10. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை __________________

விடை: கப்பல் பறவை (Frigate bird).

11. கப்பல் பறவை தரையிறங்காமல் __________________ வரை பறக்கும்.

விடை: 400 கிலோ மீட்டர்

12. கப்பல் பறவை __________________, __________________ என்றும் அழைக்கப்படுகிறது.

விடை: கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை

ஆறாம் வகுப்பு சிலப்பதிகாரம் வினா விடை | 6th Tamil Book Back Questions and Answers
காணி நிலம் ஆறாம் வகுப்பு வினா விடை

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement