Bsc Bio Maths படிப்பு படிக்க போறீங்களா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

Bsc Bio Maths Course Details 

பொதுவாக நாம் படிக்கும் எந்த படிப்பாக இருந்தாலும் அதில் நமக்கு அனைத்து விதமான பாடங்களும் பிடிக்குமா என்று கேட்டால்..? அதற்கு இல்லை என்பது தான் பெரும்பாலான நபர்களின் பதிலாக இருக்கிறது. அதிலும் சிலருக்கு கணக்கு பாடம் என்றாலே காய்ச்சல் வந்து விடும். இதற்கு மாறாக மற்ற சிலர் கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தினை அவ்வளவு ஆர்வமாக படிப்பார்கள். அதோடுமட்டும் இல்லாமல் கல்லூரியிலும் அறிவியல் மற்றும் கணக்கு பாடம் சம்மந்தப்பட்ட பிரிவினை எடுத்து படிப்பார்கள். அந்த வகையில் இன்று Bsc Bio Maths படிப்பினை படிக்க என்ன தகுதி வேண்டும், என்ன மாதிரியான வேலை கிடைக்கும் போன்ற அனைத்து தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

Bsc Information Technology படிப்பு பற்றிய தகவல்கள்.. 

என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும்:

bsc bio maths course in tamil

ஒரு மாணவர் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களை படித்து இருக்க வேண்டும்.

மேலும் பொதுத்தேர்வில் 50%-ற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய மிகவும் அவசியம்.

எந்த கல்லூரியில் சேருவது:

நீங்கள் Bsc Bio Maths படிப்பினை படிக்க வேண்டும் என்றால் அத்தகைய படிப்பு உள்ள தரமுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகமாக பார்த்து சேர்ந்து படிக்க வேண்டும். ஏனென்றால் இவற்றை பொறுத்து தான் உங்களுடைய வேலையானது அமையும்.

மேலும் கட்டணம் என்பது அந்த அந்த கல்லூரிக்கு உட்பட்டது.

Bsc Physics பட்டப்படிப்பு பற்றிய தகவல்.. 

எத்தனை செமஸ்டர்:

Bsc Bio Maths படிப்பினை படித்து முடிக்க மொத்தம் 3 வருடம் கல்லூரி படிக்க வேண்டியது இருக்கும். அதேபோல ஒரு வருடத்திற்கு 2 செமஸ்டர் என்ற அடிப்படையில் மொத்தம் 6 செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்.

மேலும் இந்த பிரிவிற்கான பாடத்திட்டங்கள் என்பது ஒவ்வொரு கல்லூரிக்கும் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது

என்ன வேலைக்கு செல்லலாம்:

  • Intermediate Applications Developer
  • Control System Engineer
  • Software Engineer UI
  • Sales and Marketing Associate
  • Paid Ads Manager
  • Content Writer

சம்பளம் ஆனது வேலையின் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து அமையும். மேலும் ஒவ்வொரு நாட்டிற்கும் சம்பளம் சில மாற்றங்களுடன் காணப்படும்.

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement