Bsc Physics பட்டப்படிப்பு பற்றிய தகவல்..!

Advertisement

Bsc Physics Course Details in Tamil

நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறேன். எனக்கு இயற்பியலில் அதிக ஆர்வம் உண்டு. அதனால் நான் Bsc Physics பட்டப்படிப்பு படிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் Bsc Physics பட்டப்படிப்பு படித்தால் வருங்காலத்தில் இந்த படிப்பிற்கான வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும். என்னுடைய வருங்காலம் எப்படி அமையும் போன்ற கேள்விகள் உங்களின் மனதில் உள்ளதா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். இன்றைய பதிவில் Bsc Physics பட்டப்படிப்பு பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த Bsc Physics பட்டப்படிப்பு படித்தால் வருங்காலத்தில் என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும். Bsc Physics பட்டப்படிப்புக்கு அடுத்து என்ன செய்யலாம் போன்ற தகவல்கள் இன்றைய பதிவில் கூறப்பட்டுள்ளது. அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.sc chemistry படிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா

Bsc Physics Course in Tamil:

Bsc Physics Course in Tamil

B.sc Physics என்பது இளங்கலை இயற்பியல் என்றும், Bachelor of Science in Physics என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Physics என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும். மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் B.sc Physics படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்துதான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.

B.sc Physics Course படிக்க தகுதி:

  • விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் இயற்பியலை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
  • மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபாடுகின்றன.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.sc Computer Science படிப்பு பற்றிய தகவல்

B.sc Physics Course Subject in Tamil:

இந்த B.sc Physics-ல் அனைத்து அடிப்படை இயற்பியல் சாரா அம்சங்களையும் படிக்க வேண்டியிருக்கும்.

  1. Classical Mechanics
  2. Thermodynamics and Statistical Mechanics
  3. Electromagnetism and Photonics
  4. Relativistic Mechanics
  5. Quantum Mechanics, Atomic Physics, and Molecular Physics
  6. Optics and Acoustics
  7. Condensed Matter Physics
  8. High-energy Particle Physics and Nuclear Physics

மேலே கூறப்பட்டுள்ள பாடங்கள் அனைத்தும் பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல் பாடத்தை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு இதனை படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.

Bsc Physics படித்தால் என்ன வேலை கிடைக்கும்:

B.sc Physics படித்தவர்களுக்கு அறிவியல் சார்ந்த அரசு மற்றும் தனியார் துறைகளில் அநேக வேலைவாய்ப்புகள் உண்டு. மேலும் ISRO, பாபா அணு ஆராய்ச்சி (Bhabha Atomic Research Center) நிறுவனம், ஆய்வகங்கள், கல்வித்துறை, மருத்துவத் துறை, தொழிற்சாலைகள் மற்றும் பவர் ஜெனரேட் கம்பெனிகள் என பல நிறுவனங்களில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளது.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.Com Course பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா

மேற்படிப்பு: 

B.sc Physics-யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விரும்பினார்கள் என்றால்,

  1. M.Sc Physics,
  2. M.Sc Applied Physics,
  3. M.Sc Nano Technology,
  4. Energy Science,
  5. GeoPhysics,
  6. Medical Physics,
  7. Renewable Energy,
  8. Bio Physics

போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement