B.sc Computer Science படிப்பு பற்றிய தகவல்..!

Advertisement

B.sc Computer Science Course details in Tamil

பொதுவாக 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அடுத்து என்ன படிப்பது என்பது மிகவும் குழப்பமாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் ஒன்று படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். ஆனால் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வேறு ஒரு படிப்பை படிக்க அறிவுரை கூறுவார்கள். அப்படி யாரோ ஒருவர் கூறுகிறார் என்று உங்களுக்கு பிடித்த படிப்பை விட்டுவிட்டு வேறு ஏதாவது ஒரு படிப்பை தேர்வு செய்து படிப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை.

அதனால் உங்களுக்கு பிடித்த படிப்பை தேர்வு செய்து படியுங்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் B.sc Computer Science படிப்பு பற்றிய தகவல் கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து B.sc Computer Science படிப்பை படித்தல் என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் போன்ற தகவலை விரிவாக அறிந்துக்கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.Com Course பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா

B.sc Computer Science Course in Tamil:

B.sc Computer Science Course in Tamil

B.sc Computer Science என்பது இளங்கலை கணினி அறிவியல் என்றும், Bachelor of Science in Computer Science என்றும் அழைக்கப்படுகிறது. B.sc Computer Science என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும். மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் உலகில் கணினி பயன்பாடு இல்லாத ஒரு இடம் கூட இருக்காது. அதனால் நீங்கள் இந்த படிப்பை படித்தால் நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டு.

B.sc Computer Science Course Details in Tamil:

நீங்கள் B.sc Computer Science படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால், அதற்கு முதலில் தேசிய அளவில் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் தேர்வு செய்யும் நல்ல தரமுள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை பொறுத்துதான் உங்களின் எதிர்காலம் நன்றாக அமையும்.

இதையும் பாருங்கள்—> பிசிஏ படிப்பு பற்றிய முழு விவரங்கள்

B.sc Computer Science படிக்க தகுதி:

  1. விண்ணப்பத்தாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் பயாலஜி, கம்ப்யூட்டர் சைன்ஸ் போன்ற  அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
  3. மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்ச 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிந்தால் இந்த படிப்பை படிக்க முடியும்.
  4. மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபாடுகின்றன.

B.sc Computer Science Subjects in Tamil:

B.sc Computer Science Subjects in Tamil

நீங்கள் B.sc Computer Science படித்தீர்கள் என்றால் கீழே கூறப்பட்டுள்ள பாடங்களை படிக்க வேண்டும்.

  • Introduction to Computers
  • Introduction to Programming Concepts
  • Introduction to Windows, its Features, Application
  • C++ Programming
  • Computer Organization Principles
  • Database Management Systems
  • Introduction to Embedded Systems
  • Fundamentals of PHP
  • Mathematical Foundation For Computer Science
  • Java Programming
  • Functions
  • Arrays
  • Disk Operating System
  • Introduction to Number System and Codes
  • Data Mining
  • Software Engineering
  • Computer Networks
  • Control Structures

இதையும் படித்துப்பாருங்கள்=> B.Sc Maths படிக்க விரும்புபவரா நீங்கள் அப்போ இதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

B.sc Computer Science Course வேலைவாய்ப்புகள்:

நீங்கள் B.sc Computer Science-யை தேர்வு செய்து முடித்த பிறகு பல துறைகளில் பல வேலைவாய்ப்புகள் உள்ளது. மேலும் தனியார் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பணிபுரியலாம். பள்ளிகளில் கணினி ஆசிரியராக பணியாற்றலாம்.

குறிப்பாக Infosys,TCS , Oracle, IBM, Wipro போன்ற தனியார் நிறுவனங்களில் வேலை பெற முடியும். Web Design, Software Design, Software Tester, Technical Supervisor, Consultancy, System Maintenance, Electronic பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெற முடியும்.

ஆனால், தற்போது இன்ஜினியரிங் முடித்தவர்களும் இத்தகைய பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே டிகிரி முடித்த பின்னரோ அல்லது டிகிரியோடோ ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ படிப்போ, முதுநிலை படிப்போ படிப்பது நல்லது.

இதையும் படித்துப்பாருங்கள்=> B.sc chemistry படிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா

மேற்படிப்பு:

B.sc Computer Science-யை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விரும்பினார்கள் என்றால்,

  1. M.Sc Computer Science
  2. MBA,
  3. MCA,
  4. Telecommunication Management,
  5. Robotic Course,
  6. Data Base Admin,
  7. MCM (Master in Computer Management),
  8. M.Sc IT,
  9. Hardware Course,
  10. 3D Animation,
  11. Web Development,
  12. Web Software Engineering

போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement