போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்

How to Learn Photoshop in Tamil

How to Learn Photoshop in Tamil

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக நாம் இந்த உலகத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது.. அதை விட்டுவிட்டு தேவை இல்லாத விஷயங்களை நாம் நினைப்பதினாலும், பேசுவதினாலும் நம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களுக்கான நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்றோம். சரி இனியாவது நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் விஷயங்களை கற்றுக்கொள்ள முயலுங்கள்.. சரி நீங்கள் போட்டோஷாப் பற்றிய அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பும் நபராக இருந்தால் இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இந்த பதிவில் போட்டோஷாப் பற்றி எனக்கு தெரிந்த அடிப்படை பாடங்கள் சொல்லித்தர விரும்புகின்றே. நாம் கற்றுக்கொள்ள விரும்பும் எந்த விஷயமாக இருந்தாலும் சரி அவற்றில் நாம் அதிக ஆர்வமாக இருந்தால் நிச்சயம் அந்த விஷயத்தை நாம் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். சரி வாங்க  போட்டோஷாப் அடிப்படை விஷயங்களை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.

photoshop Version:

அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் முதலில் போட்டோஷாப் -6, அடுத்து போட்டோஷாப்-7, போட்டோஷாப்-8 (cs-1), போட்டோ ஷாப் -9 (cs-2), போட்டோஷாப்-10 (cs-3), இறுதியாக போட்டோஷாப்-11 (cs-4) வெளியிட்டுள்ளார்கள். பெரும்பாலும் நம்மிடம் போட்டோஷாப் பதிவு 7 லிருந்து பதிவு 9 வரை இருக்கலாம். பதிவு அதிகமாக செல்ல செல்ல வசதிகள் கூடிக்கொண்டு செல்லும். நமது தேவைக்கு போட்டோஷாபில் 7,8,9 இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதுமானது.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள் | How to Learn Photoshop in Tamil

ஸ்டேப்: 1

முதலில் தங்களது போட்டோஷாப்பை திறந்துகொள்ளுங்கள். அவற்றில்  உள்ள File-ஐ Open செய்துகொள்ளுங்கள்.

பின் நீங்கள் Edit செய்ய விரும்பும் போட்டோவை, எந்த Folder-யில் save செய்து வைத்துள்ளீர்களோ அந்த Folder-ஐ திறந்து image open செய்து கொள்ளுங்கள்.

பின் மீண்டும் file-க்கு சென்று new என்பதை கிளிக் செய்யுங்கள்.

New என்பதை கிளிக் செய்தவுடன் மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு திரை திறக்கப்படும். அவற்றில் Width, Height, Resolution எவ்வளவு சைசிற்கு வேண்டுமோ அந்த size-க்கு வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் நீங்கள் Edit செய்யும் Image Pixels, Inches, cm, Points, Picas, Columns இவற்றில் எந்த வடிவத்தில் edit செய்ய விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 2

மேல் படித்தால் காட்டப்பட்டுள்ளது தான் போடோஷாப்பில் உள்ள டூல்கள்.. இவற்றில் உள்ள டூல்கள் அனைத்தும் Images-ஐ Edit செய்ய பயன்படுகிறது. அவற்றில் இரண்டாவதாக உள்ள Move Tool-ஐ நாம் பயன்படுத்தலாம்.

நீங்கள் உங்கள் folder-யில் திருந்து வைத்துள்ள Image-ஐ Move Tool-ஐ பயன்டுத்தி New Page-யில் move செய்து கொள்ளுங்கள்.

New page-ஐ விட உங்களது image-ன் அளவு பெரியதாக இருந்தால் Ctrl+T என்பதை கிளிக் செய்திர்கள் என்றால் அந்த இமேஜ் Tracing சிம்பிள் வரும், அதன் பிறகு படத்தின் அளவை சிறிதாக்கிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

நீங்கள் Edit செய்யும் படம் பிறந்த நாள் வாழ்த்திற்கு என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் Happy Birthday என்று Text வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த Text எப்படி வைக்கணும்னா மேல் படித்தால் காட்டப்பட்டுள்ள டூல்களில் T என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

T என்பதை கிளிக் செய்தவுடன் போடோஷாப்பில் மேல் உள்ள ஆப்ஷன்களில் Ste the font Family என்பதில் ஆங்கில மொழிக்கென்று சில font design, இருக்கும். எனவே அவற்றில் ஏதாவது ஒரு design-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். பின் உங்கள் Cursor-ஐ நீங்கள் edit செய்யும் image-யில் வைத்து Birthday Wishes-ஐ type செய்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் type செய்த text-ற்கு கலர், சைஸ் போன்றவற்றை மாற்றி கொள்ளலாம்.

பிறகு save என்பதை கிளிக் செய்து.. நீங்கள் edit செய்த image-ஐ Save செய்து கொள்ளுங்கள்.

இன்னும் நிறைய விஷயங்கள் போட்டோஷாப்பில் edit செய்யலாம் இது ஒரு அடிப்படையான விஷயம் ஆகவே.. யூடியூபில் போடோஷாப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லித்தருகிறார்கள். அவற்றை பார்த்து போடோஷாப் பற்றி மேலும் நிறைய விஷயங்களை கற்று கொள்ளுங்கள் நன்றி வணக்கம்..

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com