இல்லம் தேடி கல்வி திட்டம் என்றால் என்ன? | Illam Thedi Kalvi Thittam Apply Online in Tamil
தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக மாணவர்களின் கல்விநிலை பெரும் பின்தங்கிய நிலையில் இருந்தது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு தமிழக முதல்வர் மாணவர்களுக்காக இல்லம் தேடி கல்வி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். இல்லம் தேடி கல்வி திட்டமானது பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் ‘இல்லம் தேடிக் கல்வி’ மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்ய ஏதுவாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வாங்க இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மேலும் விவரங்களை கீழே காண்போம்..!
இல்லம் தேடி கல்வி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் |
இல்லம் தேடி கல்வி திட்டம் என்றால் என்ன?
முதல்வரின் இல்லம் தேடி கல்வி திட்டமானது தன்னார்வலர்கள் மாணவர்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் வகுப்புகள் எடுப்பார்கள்.
இந்த திட்டத்தில் 12-ஆம் வகுப்பு வரை படித்த அனைவரும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும், பட்டம் பெற்றவர்கள், நடுநிலைப் பள்ளி மாணவர்களும் பாடம் கற்பிக்கலாம்.
இந்த இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஒவ்வொரு குழு மாணவர்களுக்கும் வாரம் முழுவதும் சுமார் ஆறு மணிநேர வகுப்புகள் நடைபெறும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இந்த இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் கல்வி பயிலலாம். இந்த திட்டம் ஒரு தன்னார்வ தொண்டினை சேர்ந்ததாகும். மாணவர்கள் பள்ளி சென்று மாலை நேரத்தில் அவர்களுக்கு கல்வி பயிற்சி அளிக்கும் வகையில் இந்த திட்டம் முதல்வரின் மூலம் நடைமுறைக்கு வந்தன.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தகுதிகள்:
- வாரத்தில் குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
- தன்னார்வல ஆசிரியர்களுக்கு குழந்தைகளுடன் உரையாடுவதற்கு கண்டிப்பாக தமிழ் மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
- ஆசிரியர்கள் தமிழ், கணிதம், ஆங்கில மொழி கற்றுத்தர வேண்டும்.
- இந்த திட்டத்தில் யார் நிர்பந்தமும் இல்லாமல் தன்னார்வலராக பங்கேற்க வேண்டும்.
- இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
- குழந்தைகளை ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டி வழங்க வேண்டும்.
1 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி அட்டவணை..! |
இல்லம் தேடி கல்வி திட்டம் சம்பளம்:
- இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 1,000/- வழங்கப்படுகிறது.
- தன்னார்வலர்களுக்கான ஊதியம் தலா ரூ. 2,000 ஆக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
தன்னார்வலர்களுக்கான பதிவேற்று படிவம்:
Volunteer Registration Form | CLICK HERE>> |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |