Tet Exam பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Tet Exam Qualification in Tamil

வணக்கம் அன்பார்ந்த நேயர்களே… இன்றைய பதிவில் Tet Exam பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளப் போகிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய் தந்தைக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் தான் ஆசிரியர். ஆசிரியர்கள், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத இடத்தை பெறுகின்றார்கள். மகத்தான பணியாகக் கருதப்படும் ஆசிரியப் பணி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கல்வி கற்றிருக்க வேண்டும். அந்த கல்வியை அனைத்து மனிதர்களுக்கும் கற்று கொடுப்பவர்கள் தான் ஆசிரியர்கள். அந்த வகையில் இந்த மகத்தான ஆசிரியர் பணி பற்றிய சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் பாருங்கள்—> பிசிஏ படிப்பு பற்றிய முழு விவரங்கள்

ஆசிரியர் பணியின் சிறப்பு:

ஆசிரியர்கள் தங்களிடம் வரும் மாணவர்களுக்கு நல்ல பண்புகளையும் நல்லொழுக்கத்தையும் கற்று கொடுக்கின்றனர். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கல்வியறிவை அவர்கள் வாழ்நாளின் மிக முக்கியமான சொத்தாகக் கருதுகின்றன.

வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர் பணிக்கு உண்டு. ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர். ஒன்றுமே தெரியாமல் பள்ளியில் சேரும் குழந்தைகளை ஒரு பொக்கிஷ புத்தகமாக மாற்றுவதே ஆசிரியர்கள் தான்.

ஒரு மனிதனுக்கு கல்வி அறிவை கற்று தரும் இடத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நம்மை உருவாக்கும் ஆசிரியர்களை நாம் போற்றி வணங்க வேண்டும். சாதாரண மனிதனை ஒரு சாதனையாளனாக மாற்றும். ஆசிரியரை நாம் போற்றி வணங்க வேண்டும்.

ஆசிரியர் பணி: 

ஆசிரியர் பணிக்காக இந்த Tet Exam நடைபெறுகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் இந்த Tet தேர்வு எழுதி, தகுதி மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்த Tet Exam இரண்டு தாள்களாக நடைபெறுகிறது.

  1. Tet Exam முதல் தேர்வு டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு நடைபெறுகிறது.
  2. இரண்டாம் தேர்வு பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு நடைபெறுகிறது.

Tet Exam எழுத கல்வி தகுதி:

  1. Tet Exam முதல் தாள் எழுதுவதற்கு, 12 ஆம் வகுப்பு தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) முடித்திருக்க வேண்டும்.
  2. Tet Exam இரண்டாம் தாள் எழுதுவதற்கு, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதேபோல டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) அல்லது ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  3. Tet Exam இரண்டாம் தாள் எழுத தகுதி உள்ளவர்கள் முதல் தேர்வையும் எழுதி வெற்றி பெறலாம்.

Tet Exam பணிக்கான வயது தகுதி:

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் Tet Exam எழுதலாம். இந்த Tet தேர்வுக்கு உச்ச வயது வரம்பு தேவையில்லை.

Tet Exam முதல் தேர்வு முறை:

இந்த தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் 150 வினாக்கள் கேட்கப்படுகின்றன.

  • குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் என்ற தலைப்பில் 30 வினாக்களும்
  • மொழிப்பாடம் – 30 
  • ஆங்கிலம் – 30
  • கணிதம் – 30
  • சுற்றுச்சூழல் கல்வி – 30

என 150 வினாக்கள் கேட்கப்படுகின்றன.

இந்த Tet Exam தேர்வானது 3 மணி நேரம் நடைபெறுகிறது.

Tet Exam இரண்டாம் தேர்வு முறை:

இந்த Tet Exam இரண்டாம் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது.

  • குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் என்ற தலைப்பில் 30 வினாக்களும்
  • மொழிப்பாடம் – 30
  • ஆங்கிலம் – 30
  • சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு – 60

என்று 150 வினாக்கள் Tet Exam இரண்டாம் தேர்வில் கேட்கப்படுகின்றன. இந்த Tet Exam 2 ஆம் தேர்வானது 3 மணி நேரம் நடைபெறுகிறது.

நீங்கள் 12th படித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது என்று தெரியவில்லையா..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement