நில குத்தகை சட்டம் | Land Tenancy Act india

Land Lease Laws in India in Tamil

Land Lease Laws in India in Tamil

பெரும்பாலான மக்களிடம் நிலம் இருக்காது. ஆனால் அதனை குத்தகைக்கு எடுத்து அதில் தான் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் கொஞ்ச காலமாக அதுவும் இல்லை. ஏன்னென்றால் விவசாயம் செய்தால் நஷ்டம் தான் ஆகிறது. அதற்கு ஏன் செய்யவேண்டும் என்று விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

அதையும் மீறி விவசாயம் செய்வோம் என்று குத்தகைக்கு நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தால் கொஞ்ச நாட்களில் என்னுடைய நிலம் என்று சொல்லி குத்தகைக்கு கொடுத்த பணத்தை மறைத்து நிலத்தை வாங்கிக் கொள்வார்கள். இது போல் நிறைய வகையான மோசடிகளை செய்து வருகிறார்கள். இது போல் செய்பவர்களை தடிக்கும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. வாங்க அது என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்..!

நில குத்தகை சட்டம்:

உங்களுடையதை மற்றவர்களுக்கு கொடுத்தாலும் சரி அல்லது உங்கள்  சொந்தகாரர்களிடம் கொடுத்தாலும் சரி குத்தகை ஒப்பந்தம் செய்வது மிகவும் அவசியம். யாராக இருந்தாலும் சட்டபூர்வாமாக குத்தகை ஒப்பந்தம் செய்வது மிகவும் அவசியம்.

தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் 1955 சட்டப்பிரிவு -4 பி (2) -ன்படி நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் போது முக்கியமான விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்,

அதாவது குத்தகை நிலத்தின் சர்வே எண் அளவு, குத்தகைக் காலம், குத்தகைத் தொகை, செலுத்தும் முறை, என நிலத்தின் பயன்பாடு, மேலும் குத்தகை ஒப்பந்த காலம் என நில உரிமையாளருடன் குத்தகைக்கு எடுப்போரும் ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும்.

அந்த ஒப்பந்தத்தில் இரு முகவர்களும் கையெழுத்திட வேண்டும், அதாவது குத்தகைதாரர், குத்தகை எடுப்போர் என இருவரும்.

இந்த ஒப்பந்தத்தை 3 மாதிரி போல் தயாரித்து இரண்டை இருதரப்பினரும் ஆளுக்கு ஒன்று என பிரித்துக் கொள்ள வேண்டும். மீதி இருக்கும் ஒரு ஒப்பந்த மாதிரி படிவத்தை 15 நாட்களுக்குள் உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாச்சியர் அலுவலத்தில் பதிவிட கொடுக்கவேண்டும்.

குத்தகை ஒப்பந்தத்தை முத்திரைத்தாளில் தான் எழுதவேண்டும் என்ற எந்த ஒரு சட்டமும் இல்லை சாதாரணமாக வெள்ளை தாளில் எழுதலாம். இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் உள்ளது போல் நடந்து கொள்ளவேண்டும். இருவரில் யார் மீறினாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு குத்தகை ஒப்பந்தம் அவசியம் இல்லை.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்.. எதற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இதனை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்👉👉  சட்டம்