இந்திய தண்டனை சட்டம் 376 | IPC 376 in Tamil

Advertisement

IPC 376 in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் இந்திய தண்டனை சட்டங்களில் பல வகையான தண்டனை சட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இந்திய தண்டனை சட்ட பிரிவு 376. இந்த தண்டைனை சட்டம் எதற்காக ஒரு நபருக்கு வழங்கப்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவு மூலம் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இந்திய தண்டனை சட்டம் 376 | IPC 376 in Tamil:

1. 2-வது கிளைப்பிரிவில் விளக்கப்பட்டுள்ள நிலைகளில் அன்றி வன்முறைப் புணர்ச்சியில் ஈடுபடுகின்ற ஒரு நபருக்கு 7 ஆண்டுக்கு குறையாமலும், ஆனால் 10 ஆண்டுகள் அல்லது ஆயுட்காலம் நீடிக்கக் கூடிய சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.

வன்முறைப் புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டவர், அந்த நபரின் மனைவியாகவும், பதினெட்டு வயதுக்கு குறையாதவராகவும் இருந்தால் அந்த நபருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.

எனினும், தாம் தக்கது மற்றும் தனித்தன்மை வாய்ந்தது என்று, கருதி தம் தீர்ப்புரையில் வெளியிடக்கூடிய காரணங்களுக்காக (அந்த நீதிமன்றம்) அந்த நபருக்கு 7 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைக் காவலைத் தண்டனையாக விதிக்கலாம். (சிறைக்காவல் என்பது கடுங்காவல் அல்லது வெறுங்காவல் ஆகிய இரண்டில் ஏதுவாகவேனும் இருக்கலாம்.)

2. (அ) ஒரு காவல் அலுவலர்:-

(i) தாம் பணியாற்றும் காவல் நிலையத்தின் வரம்புக்குள் அல்லது
(ii) தாம் பணியாற்றும் காவல் நிலையமாக இருப்பினும் அல்லது அப்படி இல்லாதிருப்பினும் ஒரு காவல் நிலையக் கட்டிடத்தில் அல்லது
(iii) தம் பொறுப்பில் உள்ள அல்லது தமக்கு கீழ் பணிபுரியும் ஒரு காவல் அலுவலரின் பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணிடம் வன்முறைப் புணர்ச்சியில் ஈடுபட்டாலும் அல்லது

ஆ) அரசு ஊழியராக இருக்கும் ஒருவர், தமது பொறுப்பில் உள்ள அல்லது தமக்கு கீழ் பணியாற்றும் அலுவலர் ஒருவரின் பொறுப்பிலுள்ள பெண்ணிடம் வன்முறைப் புணர்ச்சி செய்தாலும் அல்லது

இ) அமலில் உள்ள சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறைக் காவல் விடுதி அல்லது வேறு காப்பிடம், மகளிர் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகிய ஒன்றின் நிர்வாகப் பொறுப்பிலுள்ள அல்லது அங்கே பணிபுரியும் ஓர் அரசு ஊழியர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தச் சிறைக்காவல் விடுதி, காப்பிடம் அல்லது இல்லம் ஆகியவற்றில் உள்ள ஒரு பெண்ணிடம் வன்முறைப்புணர்ச்சியில் ஈடுபட்டாலும் அல்லது

ஈ) ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் அல்லது அதன் நிர்வாகப் பொறுப்பில் உள்ள ஓர் அரசு ஊழியர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மருத்துவமனையில் உள்ள ஒரு பெண்ணிடம் வன்முறைப் புணர்ச்சியில் ஈடுபட்டாலும் அல்லது

உ) ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்த பின்னர், அந்த பெண்ணுடன் வன்முறைப் புணர்ச்சி செய்தாலும் அல்லது

ஊ) பதினெட்டு வயதுக்கு குறைவான ஒரு பெண்ணை வன்முறைப்புணர்ச்சி செய்தாலும் அல்லது

எ) பலர் ஒன்றாகக் கூடி வன்முறைப் புணர்ச்சியில் ஈடுபட்டாலும் அத்தகைய நபருக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைக்ககாவல் அல்லது ஆயுட்காலம் விரைவில் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். மற்றும், அந்த நபருக்கு அபராதமும் விதிக்கலாம்.

எனினும், நாம் தக்கதென்றும் தனித்தன்மை பெற்றதென்றும் தம் தீர்ப்புரையில் குறிப்பிடக் கூடிய காரணங்களுக்காக ஒரு நீதிமன்றம் அந்தத் தண்டனை காலத்தைப் பத்தாண்டுகளுக்கு குறைவான காலத்துக்குச் சிறைக்காவல் விதிக்கலாம்.

விளக்கம் – 1:

இந்தக் கிளை பிரிவின்படி, ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒன்று கூடி ஒரு பெண்ணை வன்முறைப் புணர்ச்சிக்கு ஆளாக்கும் போது அந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கூட்டாக வன்முறைப்புணர்ச்சி செய்ததாகக் கருதப்படுவார்கள்.

விளக்கம் – 2:

“மகளிர் அல்லது குழந்தைகள் இல்லம்” என்பது பெண்களையும், குழந்தைகளையும் வரவேற்றுப் பாதுகாக்கும் ஓர் இல்லத்தைக் குறிக்கும். அநாதை இல்லம் அல்லது திக்கற்றோர் இல்லம் அல்லது புறக்கணிக்கப்பட்ட பெண்கள் அல்லது கைம்பெண்கள் இல்லம் அல்லது கைம்பெண்கள் இல்லம் என்ற இல்லங்களையும் இந்தச் சொல் குறிக்கும்.

விளக்கம் – 3:

மருத்துவமனை – என்பது ஒரு மருத்துவமனைக்கு கட்டத்தையும் நோயுற்றோர் அல்லது நோய்க்குப் பிறகு உடல் நல்லதை பேணிச் சீராக்கும் நிலையில் உள்ளோர் அல்லது புணர்வாழ்வுக்காகத் தங்கியிருக்கும் நபர்கள் மருத்துவ உதவி தேவைப்பட்டோர் அல்லது மருத்துவ உதவி பெற்று வருவோர் உள்ள இடத்தை குறிக்கும்.

இந்திய தண்டனை சட்டம் 376 
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307-யின் விளக்கம்
294 B IPC in tamil
இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement