உங்கள் வீட்டில் கிளைரிசிடியா மரம் இருக்கா? அப்போது அதை பத்தி தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

கிளைரிசிடியா மரம்

நண்பர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்.. இன்று நாம் கிளைரிசிடியா மரம் பற்றி பல விஷயங்களை தெரிந்துகொள்வோம். இந்த கிளைரிசிடியா மரத்தை தமிழில் சீமைக் கிளுவை என்று அழைப்பார்கள். இந்த மரத்தில் உள்ள பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக கண்களை கவரும் நிறத்தில் இருக்கும். இதன் மரம் பலவகையான விஷயங்களுக்கு மிகவும் பயன்படுகிறது. சரி வாங்க இந்த மரம் குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம்.

Gliricidia Tree in Tamil:Gliricidia

இந்த கிளைரிசிடியா மரம் பேவேசியே தாவர குடும்பத்தை சேர்ந்ததாகும். இக்குடும்பத்தின் பொது பண்புகள் விரைவாக வளரும், மண்ணின் நுண்ணுயிரிகளுடன் கைகோர்த்து வளிமண்ட நைட்ரஜனை மண்ணில் சேமிக்கும். வெட்ட வெட்ட தளிர்க்கும். ஒரு மரமே 10 மீட்டர் வரை வளரும்.

இத்தாவரம் மிகுந்த பொருளாதரம் முக்கியதுவம் வாய்ந்தது. இவற்றைஆங்கிலத்தில் Multi Purpose Tree என்று அழைப்பார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் வீட்டில் கருவேப்பிலை மரம் உள்ளதாக அப்படி என்றால் இந்த விஷயத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!

அப்படி என்ன பல பயன்களை தருகிறது என்றால், பசுந்தழை உரமாக பயன்படுகிறது, கால்நடைகளுக்கு சிறந்த உணவாக பயன்படுகிறது, புதிய மரக்கன்றுகள் நடும்போது அதற்கு ஆதரவாக, இது பின்பு செவிலித்தாயாக அந்த கன்றை வளர்த்திடும்.

மேலும் உயிர்வேலி அமைத்திட, மண்ணில் தழைச்சத்தை சேமிக்க, இம்மரம் இலைகளை உதிர்ந்து மண்ணில் கரிம பொருட்களை அதிகரிக்க பயன்படுகிறது. 

தேனீக்களுக்கு முக்கியமான மேச்சல் மரமாக இருக்கிறது, விறகுக்காக, காயவைத்து பொடி செய்யப்பட்ட இலைகள் எலி கொல்லியாக அதாவது கிளைரிசிடியா எனப்படும் இலத்தின் வார்த்தைக்கு எலி கொல்லி என்று அர்த்தமுள்ளது. ஆக எலி கொல்லியாக பயன்படுகிறது.

மேலும் இம்மரம் ரோட்டோரங்களில் அழகு மரமாக, நிழல் மரமாக, மிளகு கொடியை ஏற்றிவிட, காபி தோட்டங்களுக்கு நிழல் மரமாக, சிறு சிறு வேளாண் கருவிகள் செய்ய, வளம் குன்றிய நிலத்தை மேம்படுத்த. மண் அரிமாணத்தை தடுக்க இப்படி பல வகைகளில் இந்த மரம் பயன்தருகிறது.

இவ்வளவு பயன்களை தரும் இந்த மரத்தை நீங்கள் விதை மூலமாகவோ, குச்சிகள் மூலமாகவோ வளர்க்கலாம். இப்பதிவை முழுமையாக படித்தமைக்கு மிக்க நன்றி..🙏🙏🙏

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க வீட்டுல முருங்கை மரம் இருந்தும் அதை பத்தி தெரிஞ்சிக்கலனா எப்படி..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement