Vallikannan Novel Writer | வல்லிக்கண்ணன் ஆசிரியர் குறிப்பு
தினமும் பொதுநலம்.காம் பதிவின் மூலம் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தெரிந்து கொள்ள போகிறோம் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நாம் இன்று “பெரிய மனுஷி” என்னும் சிறுகதையை எழுதிய எழுத்தாளர் யார் என்றும் அவரை பற்றிய தகவல்களையும் தான் தெரிந்து கொள்ள போகின்றோம். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
சிறந்த 10 நாவல் எழுத்தாளர்கள் |
எழுத்தாளர் வல்லிக்கண்ணன் வரலாறு:
இவர் நவம்பர் 12, 1920 ஆம் ஆண்டு ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, மகமாயி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி ஆகும். இவர் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்தார். புத்தகம் எழுதுவதில் ஆர்வமாக இருந்த இவர் இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி 30 வயதிற்குள் இருபத்தைந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
1940 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என்றும், ராசுகி என்ற பெயர்களில் வல்லிக்கண்ணன் எழுதத் துவங்கினார்.
அந்த நேரத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என்று நினைத்த கிருஷ்ணசாமி அவர்கள் தனது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன் பெயரை கண்ணன் என்று மாற்றி வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.
சஞ்சாரம் என்ற நாவலை எழுதிய தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பற்றிய குறிப்புகள்..! |
வல்லிக்கண்ணன் எழுத்தாளராக வேண்டும் என்பதற்காக அரசுப் பணியிலிருந்து விலகிவிட்டார். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இவருடைய சிறுகதைகளில் சில நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவருடைய “பெரிய மனுஷி” என்னும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய “வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” என்னும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இவர் எழுதிய நூல் பரிசை வென்றுள்ளது.
பல புத்தகங்களை எழுதிய இவர் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி இவ்வுல வாழ்வை துறந்தார்.
இதையும் படித்துப்பாருங்கள் =>குருதிப்புனல் என்னும் புதினத்தை எழுதிய தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய சில குறிப்புகள்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |