வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உருளைக்கிழங்கை வைத்து இப்படி கூட செய்யலாமா..? செம டேட்ஸ்டான ஸ்நாக்ஸ்..!

Updated On: June 2, 2023 11:02 AM
Follow Us:
Potato Snacks Recipes in Tamil
---Advertisement---
Advertisement

Potato Snacks Recipes in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போது அம்மா இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் செஞ்சீங்கன்னு கேட்டுகிட்டே உள்ள வருவாங்க..! அதுவும் இப்போ வேற லீவ் விட்டாச்சு சொல்லவே வேண்டாம். தினமும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் கண்டிப்பா செய்து கொடுக்க வேண்டும் அல்லவா..! ஆனால் தினமும் என்ன செய்வது என்று ஒரே யோசனையாக இருக்கும். அதனால் தான் இன்று உங்களுக்காக ஒரு அருமையான ஸ்நாக்ஸ் செய்வது பற்றி கூறப்போகிறேன். இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு அதிக பொருட்கள் தேவையில்லை. உருளைக்கிழங்கு மட்டும் இருந்தால் போதும் அருமையான ஸ்நாக்ஸ் செய்து அசத்தலாம்..! சரி வாங்க நண்பர்களே இந்த ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

ஸ்நாக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்: 

  1. உருளைக்கிழங்கு – 3
  2. அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்
  3. சீஸ் தேவையான அளவு
  4. கொத்தமல்லி சிறிதளவு
  5. மிளகு தூள் சிறிதளவு
  6. கரமசாலா – 1 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

மொறுமொறு ஸ்நாக்ஸ் செய்முறை: 

மொறுமொறு ஸ்நாக்ஸ் செய்முறை

முதலில் உருளைக்கிழங்கு 3 அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளுங்கள்.

மாலை நேரத்தில் உருளைக்கிழங்கு மட்டும் வைத்து இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்

உருளைக்கிழங்கு வெந்த பின் அதன் தோலை நீக்கிவிட்டு அதை மசித்து கொள்ள வேண்டும்.

மொறுமொறு ஸ்நாக்ஸ் செய்முறை

பின் அதில் கொத்தமல்லியை அதில் சேர்த்து கொள்ளவும். அடுத்து அதில் தேவையான அளவு சீஸ் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். அடுத்து 1 ஸ்பூன் அளவிற்கு மிளகு தூள், 1 ஸ்பூன் அளவிற்கு கரமசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

👉 இந்த மாதிரி ஒரு ஸ்நாக்ஸை உங்க குழந்தைக்கு செஞ்சி கொடுங்க.. அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும்

இறுதியாக அரிசி மாவு 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அவ்வளவு தான் இந்த மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து கொள்ளவும்.

மொறுமொறு ஸ்நாக்ஸ் செய்முறை

அடுத்து இதை நீள நீளமாக ஒரு அளவில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அதாவது மேல் படத்தில் உள்ளது போல வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.

10 நிமிடத்தில் கத்தரிக்காயில் இப்படி ஒரு டிஷ் செய்யலாமா.. இந்த டிஸ்ஸை இனிமேலாவது தெரிஞ்சுக்கோங்க..

கடாயை அடுப்பில் வைக்கவும்: 

மொறுமொறு ஸ்நாக்ஸ் செய்முறை

அவ்வளவு தான் இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் நாம் வெட்டி வைத்துள்ளதை அதில் போட்டு பொறிக்க வேண்டும். நன்றாக பொரிந்து வந்தவுடன் எடுத்து விட வேண்டும்.

அவ்வளவு தான் இதை உங்கள் குழந்தைகளிடம் கொடுத்து பாருங்கள். அனைவருமே ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now