உருளைக்கிழங்கில் இந்த மாதிரி சீஸ் பால்ஸ் செஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா..?

Advertisement

Potato Recipe in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் இன்னக்கி என்னம்மா ஸ்நாக்ஸ் செஞ்சீங்கன்னு கேட்டுகிட்டே உள்ள வருவாங்க. அதுவும் இப்போது அனைத்து குழந்தைகளுக்கும் விடுமுறை வேற விடப்பட்டுள்ளது. சொல்லவே வேண்டாம் தினமும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி அடம்பிடிப்பார்கள். அதிலும் முக்கியமான கண்டிஷன் ஓரே மாதிரியான ஸ்நாக்ஸ் செய்ய கூடாது என்றும் சொல்வார்கள். உடனே நமக்கு தினமும் என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்று ஓரே கேள்வியாக இருக்கும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்று உருளைக்கிழங்கை வைத்து அருமையான சீஸ் பால்ஸ் செய்ய போகிறோம். அது எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Potato Cheese Balls Recipe in Tamil: 

தேவையான பொருட்கள்: 

  1. உருளைக்கிழங்கு –
  2. சோளமாவு – 2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  4. மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
  5. பெரிய வெங்காயம் – 2 
  6. சீஸ் – தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் – சிறிதளவு
  8. மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
  9. கரமசாலா – 1 ஸ்பூன்
  10. சீரகத் தூள் – 1 ஸ்பூன்
  11. உப்பு – தேவையான அளவு
  12. அரிசி மாவு – தேவையான அளவு
  13. பிரட் தூள் – தேவையான அளவு
  14. எண்ணெய் – தேவையான அளவு
உருளைக்கிழங்கை வைத்து இப்படி கூட செய்யலாமா.. செம டேட்ஸ்டான ஸ்நாக்ஸ்

உருளைகிழங்கை வேகவைக்கவும்: 

உருளைகிழங்கை வேகவைக்கவும்

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதை மசித்து எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ள வேண்டும். மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரமசாலா, மிளகு தூள், சீரகத்தூள், கொத்தமல்லி சிறிதளவு, தேவையான அளவு உப்பு மற்றும் சோளமாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

மாலை நேரத்தில் உருளைக்கிழங்கு மட்டும் வைத்து இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்

உருட்டி கொள்ள வேண்டும்: 

உருட்டி கொள்ள வேண்டும்

பின் கைகளில் எண்ணெய் தடவி கொண்டு நாம் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து உருட்டி கொள்ள வேண்டும். அதற்கு முன் அந்த மாவின் நடுவில் சீஸ் வைத்து உருட்டி கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான். அடுத்து ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு சிறிதளவு போட்டு அதில் தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கரைத்து எடுத்து கொள்ளவும். அதுபோல ஒரு தட்டில் பிரட் தூள் எடுத்து வைத்து கொள்ளவும்.

அவ்வளவு தான் இப்போது நாம் உருட்டி வைத்துள்ள சீஸ் பால்ஸை அரிசி மாவு கரைசலில் நனைத்து பிரட் தூள் தூவி எடுத்தது கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைக்கவும்: 

கடாயை அடுப்பில் வைக்கவும்

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின் எண்ணெய் சூடானதும் அதில் நாம் உருட்டி எடுத்து வைத்துள்ளதை போட்டு பொறித்து எடுக்க வேண்டும். அவவ்ளவு தான் சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement