தமிழ்நாட்டில் DSP-க்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

DSP Salary in Tamilnadu

DSP Salary in Tamilnadu

நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு அரசு வேலைகள் கிடைக்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அரசு தரும் சம்பளம், அதிகபட்ச சலுகைகள் என்று சொல்லலாம். ஆனால் இந்த மாநில அரசு வேலைகளில் அதிகளவு சம்பளம் பெறுபவர்கள், ஒரு மத்திய அரசுத்துறை ஊழியரை போல இருக்கலாம் என்று எண்ணுவது உண்டு. அதே போல ஒரு மத்திய அரசு ஊழியர் அதனை விட உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கமானது. ஆனால் இந்தியாவிலேயே மிக உயர்ந்த அளவு சம்பளம் பெறும் ஒரு பணியிடம் உண்டு.

அது தான் காவல் துறை பணி. காவல் துறையில் பணிபெற விரும்புபவர்கள்  யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்தும் தேர்வில் வெற்றிபெற வேண்டும். இத்தகைய காவல் துறையில் நிறைய பதவிகள் உள்ளது. ஒவ்வொரு பதவிகளுக்கு ஏற்றது போல் பணிகளும், அதற்கான ஊதியமும் வழங்கபடுகிறது. ஒவ்வொரு பதவி காலம் முடியும் போதும் அதற்கு நிகரான அடுத்த அடுத்த பதவி உயர்வுக்கான பணிகளும். அந்த பதவி உயர்வுக்கான ஊதியமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று நாம் DSP பணிக்கான மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டரின் (SI) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் DSP-க்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?:

தமிழ்நாட்டில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு என்றால் 69,000/- ரூபாய் ஆகும். இதனுடன் அவர்களுக்கு  Dearness Allowance ரூபாய் 11,730, Medical Allowance ரூபாய் 300, Risk Allowance ரூபாய் 900, Washing Allowance ரூபாய் 500 என்று அவர்களுக்கும் மாத சம்பளமாக 82,430/- ரூபாய் வாங்கப்படும். மேலும் இதில் ஒவ்வொரு ரேங்கில் உள்ள IPS அதிகாரிகளுக்கும் சம்பளம் வித்தியாசப்படும். மேலும் இந்த அதிகாரிகளுக்கு வீடு மற்றும் கார் சிறப்பு சலுகையாக கொடுக்கப்படும்.

ஓய்வூதியம்:

அவர்கள் வாழ்நாள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை அனுபவிக்கிறார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஊரக வளர்ச்சி அதிகாரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

SHARE