IFS அதிகாரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Advertisement

IFS அதிகாரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? IFS Officer Salary in Tamil

IFS அதிகாரி என்றால் என்ன? IFS அதிகாரிக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ள நினைக்கும் அனைவருக்கும் இன்றைய பதிவு சமர்ப்பணம். இன்று நாம் IFS அதிகாரிக்கு எவ்வளவு சம்பளம் என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்திய வெளியுறவு சேவை (Indian Foreign Service) இந்திய வெளியுறவு அமைச்சகத்தை நடத்துவதற்கான சிறப்பு சேவையாகும். IFS அதிகாரி மிகவும் பொறுப்பான பதவியாகும். ஒருவர் இந்த பதவியில் இருந்தால் அவர்கள் வெளிநாட்டில் வாழ வாய்ப்பு கிடைக்கும்.

நீங்கள் IFS அதிகாரியாக விரும்பினால் சிவில் சர்வீசஸ் தேர்வில் (UPSC Exam) வெற்றிபெற வேண்டும். இதற்கான தேர்வை UPSC ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே IAS, IPS மற்றும் IFS அளவிலான வேலைகளைப் பெற முடியும்.

சம்பளம் எவ்வளவு?

IFS அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே 60,000/- ரூபாய் முதல் 2,50,000/-  ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதனுடன் அலவன்ஸ் எல்லாம் சேர்க்கும்போது இன்னும் குடுத்தாளவே சம்பளம் வாங்குவார்கள். இந்த சம்பளம் IFS அதிகாரிகளின் சம்பளம் வகை மற்றும் பதவிக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. மேலும் வெளிநாட்டில் பணிபுரியும் அதிகாரிகளின் சம்பளம் விகிதம் மாறுபடும். மேலும் இவருக்களுக்கும் அடுத்தடுத்த பதவி உயர்வுகளும் இருக்கிறது.

பதவி உயர்வு:

Junior Time Scale, Senior Time Scale, Junior Administrative Scale, Senior Administrative Grade, Above Super Time Scale, Apex Scale என்று இவருக்கு அடுத்தடுத்த உயர்பதவிகள் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் DSP-க்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

IFS அதிகாரிக்கான தகுதி என்ன?

IFS அதிகாரியாக ஆக, ஏதேனும் ஒரு பிரிவில் (கலை, வணிகம் மற்றும் அறிவியல்) 12 வது தேர்ச்சி பெற்ற பிறகு பட்டம் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் பட்டப் படிப்பின் கடைசி ஆண்டில் இருந்தால், IFS அதிகாரிக்கான எக்ஸாம்களில் கலந்துகொள்ளலாம். IFS அதிகாரி தேர்வில் பங்கேற்க விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வட்டார வளர்ச்சி அதிகாரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement