மேயர் பதவி என்றால் என்ன?
மேயர் பதிவு என்பது ஒரு இடங்களில் அல்லது பகுதியிகளில் உள்ள திட்டங்களை வழிவகுத்தல், தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்ற செயல்பாடுகளை செய்தல் இவருடைய மிகவும் முக்கியமான பணிகள் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தமாக 21 மாநகராட்சிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ஒவ்வொரு மேயரை நியமனம் செய்கிறார்கள். ஒவ்வொரு மேயருக்கும் ஒரு துணை மேயர் நியமனம் செய்யப்படுவார். எப்படி இந்திய குடியரசு தலைவர் நாட்டின் முதல் குடிமகனாக இருக்கிறாரோ அதேபோல் ஒரு மாநகராட்சிக்கு முதல் குடிமகன் இந்த மேயர் ஆவார்.
இவர்களை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதாவது மறைமுக தேர்தல் மூலம் கவுன்சிலர்கள் இவர்களை நியமனம் செய்கிறார்கள். சரி இந்த பதிவில் இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் பணிகள் என்ன என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஊரக வளர்ச்சி அதிகாரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
தமிழக மேயர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு? – Mayor Salary in Tamilnadu
மேயர் பதவி சம்பளம் – தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சிகளில் 1,374; நகராட்சிகளில் 3,843; பேரூராட்சிகளில் 7,621 என, நகர்ப்புற உள்ளாட்சிகளில் மட்டும் மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்கள், உள்ளாட்சி தேர்தலில், மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களில் இருந்து ஒருவர் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு, கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளம் என்பது இல்லாமல் இருந்தது.
சம்பளத்திற்கு பதிலாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் குறைந்தபட்சம் மாதம் ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்போருக்கு மட்டும், படித் தொகை வழங்கப்பட்டு வந்தது.
சென்னை மாநகராட்சியில் மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் அனைவருக்கும் ஒரு கூட்டத்துக்கு, 800 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. நகராட்சிகளில் 600 ரூபாய், பேரூராட்சிகளில் 300 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், தாங்கள் முழு நேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால், தங்களுக்கு மாதம்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என, 2022 ஏப்., 13ம் தேதி முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதன் காரணமாக அதை பரிசீலனை செய்த முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு மாதம்தோறும் மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மேயர்களுக்கு மாதம் 30 ஆயிரம்; துணை மேயர்களுக்கு 15 ஆயிரம் ; மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.
இதேபோல், நகராட்சி தலைவர்களுக்கு 15 ஆயிரம்; துணைத் தலைவர்களுக்கு 10 ஆயிரம்; நகராட்சி கவுன்சிலர்களுக்கு 5,000; பேரூராட்சி தலைவர்களுக்கு 10 ஆயிரம்; துணைத் தலைவர்களுக்கு 5,000; பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வட்டார வளர்ச்சி அதிகாரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
மேயரின் பணிகள்:
கவுன்சிலர்களை கூட்டம் கூட்டி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் தீர்மானங்களை எடுக்க அல்லது நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறார். இவருக்கு அரசாங்க சார்பில் பயணம் செய்ய இலவச கார், வீடு மற்றும் இதர செலவுகளை அரசே பார்த்து கொள்ளலும். இதேபோல் துணை மேயருக்கும் செய்வார்கள். மேயர் பதவி காலம் எத்தனை ஆண்டுகள் ஐந்து ஆண்டுகள் மட்டுமே.
இவரிடம் எந்த வித தீர்மானங்களையும் சொல்லி மனுக்கள் கொடுக்கலாம், ஆனால் அதனை முறையாக நிறைவேற்றவும் அல்லது நிராகரிக்கவும் முழு உரிமையும் இவருக்கு உண்டு. இவர் ஒரு கோடி ரூபாய் வரையும் அவசர திட்டங்களை நிறைவேற்ற எடுத்து கொள்ளலாம். பிறகு கவுன்சிலர்களிடம் சேர்ந்து ஒப்புதல் வாங்கி கொள்ளலாம்.
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |