சூப்பரான திட்டமா இருக்கே..! 1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 97,073 ரூபாய் இந்த திட்டத்தில் பெறலாமா ..!

central bank green deposit scheme details in tamil

Central Bank Green Deposit Scheme Details 

தினமும் உங்களுடைய தேவைக்காக கடினமாக உழைத்து பணத்தை சம்பாதிக்கிறீர்கள். அத்தகைய பணத்தை வைத்து தான் உங்களுடைய மாற்றும் பிள்ளைகளின் தேவையினை பூர்த்தி செய்து வாழ்க்கையினை மகிழ்ச்சியாக கழித்து வருகிறீர்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் அனைவருடைய வாழ்க்கையிலும் சேமிப்பு என்பது பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட சிறிய அளவிலாவது இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் நாம் சேமிக்கும் ஒவ்வொரு தொகையும் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆகவே இதன் அடிப்படையில் 1 லட்சம் ரூபாய்க்கு வட்டி மட்டுமே 97,073 ரூபாய் கிடைக்கக்கூடிய ஒரு திட்டத்தை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ 400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.! மார்ச் 31 கடைசி தேதி..

Green Deposit Scheme For Central Bank of India in Tamil:

சென்ட்ரல் பேங்க் அறிவித்துள்ள இந்த திட்டத்தில் உங்களுடைய முதலீட்டு தொகையினை ஆன்லைன் மூலம் மட்டும் செலுத்த முடியும். Mobile Banking, Net Banking இதில் இரண்டு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

இத்திட்டத்திற்கான முதலீடு தொகை:

நீங்கள் சென்ட்ரல் பேங்க் அறிவித்துள்ள இந்த திட்டத்தில் சேர வேண்டும் என்றால் இதற்கான குறைந்தபட்ச தொகை 50,000 ரூபாய் மற்றும் அதிகப்பட்ச தொகை 1,99,99,999 ரூபாய் ஆகும்.

வட்டி விகிதம்%:

மூன்று விதமான முதிர்வு காலங்களை கொண்டுள்ள இந்த திட்டத்தில் வட்டி விகிதமும் மூன்று விதமாக உள்ளது.

Green Deposit Scheme For Central Bank of India
முதிர்வு காலம்  General Citizen Interest% Senior Citizen Interest%
1111 நாட்கள் 6.75% 7.25%
2222 நாட்கள் 6.75% 7.25%
3333 நாட்கள் 7% 7.50%

 

மேலே அட்டவணையில் சொல்லப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல் சென்ட்ரல் பேங்கில் வேலை செய்த General Citizen-ற்கு 1% கூடுதலான வட்டியும் மற்றும் Senior Citizen-ற்கு 1.50% கூடுதலான வட்டியும் மூன்று முதிர்வு காலங்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் என்பது மூன்று முறையில் வழங்கியுள்ளது.

  • 1111 நாட்கள்
  • 2222 நாட்கள்
  • 3333 நாட்கள்

இத்திட்டத்தில் நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:

Central Bank Green Deposit Scheme Details 
முதலீடு செய்த தொகை 
 
முதிர்வு காலம் 
 
General Citizen Senior Citizen
வட்டி தொகை   மொத்த தொகை  வட்டி தொகை மொத்த தொகை 
1 லட்சம் 1111 நாட்கள் 22,600 ரூபாய் 1,22,600 ரூபாய் 24,448 ரூபாய் 1,24,448 ரூபாய்
1 லட்சம் 2222 நாட்கள் 50,287 ரூபாய் 1,50,287 ரூபாய் 54,850 ரூபாய் 1,54,850 ரூபாய்
1 லட்சம் 3333 நாட்கள் 88,432 ரூபாய் 1,88,432 ரூபாய் 97,073 ரூபாய் 1,97,073 ரூபாய்

 

இதையும் படியுங்கள்⇒ Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி.. 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil