மாதம் Rs. 3,348/- செலுத்தினால் போதும் LIC-யில் Rs. 13,75,000 பெறுவதற்கான அருமையான பாலிசி..!

dhan rekha lic policy details in tamil

LIC Investment Plan

நாம் எப்போதும் நமது வாழ்க்கையினை பற்றி யோசித்து ஒரு தொகையினை முதலீடு செய்து அதனை சேமிக்க தொடங்குவோம். ஏனென்றால் இப்படி நாம் சேமித்து வைக்கும் தொகை நமக்கு பிற்காலங்களில் உதவியானதாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் இருக்கிறது. அந்த வரிசையில் நாம் முதலீடு செய்வதற்கு போஸ்ட் ஆபிஸ் மற்றும் LIC-யில் நிறைய திட்டங்கள் இருக்கிறது. என்ன தான் இப்படி நிறைய திட்டங்கள் இருந்தாலும் கூட ஒரு திட்டத்தின் கீழ் நாம் முதலீடு செய்வதற்கு முன்பு அதை பற்றிய முழு விவரங்களையும் நன்றாக தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே உங்களுக்கு பயனளிக்கும் வகையில் LIC Dhan Rekha Policy பற்றி முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ 1 லட்சம் முதலீட்டிற்கு 2 லட்சம் வருமானம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!

Dhan Rekha LIC Policy Details in Tamil:

நீங்கள் Dhan Rekha LIC Policy-ன் கீழ் முதலீடு செய்ய போகிறார்கள் என்றால் முதலில் முதலீடு செய்ய இருக்கின்றன தொகை மற்றும் Policy முடியும் காலம் இரண்டினையும் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்தீர்கள் என்றால் இது ஒரு Money Back Policy என்பதால் இத்தகைய பாலிசியின் இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட தொகை  உங்களுக்கு Money Back வழங்கப்படும்.

Money Back Amount விதிமுறைகள்:

lic dhan rekha policy details in tamil

பாலிசி முதிர்வு காலம் 20 வருடம்:

நீங்கள் 20 வருட காலம் பாலிசி தொகையினை தேர்வு செய்தீர்கள் என்றால் நீங்கள் பாலிசி செய்துள்ள மொத்த தொகையில் இருந்து 10% அடிப்படையில் குறிப்பிட்ட தொகையினை பாலிசின் 15-வது வருடத்தில் உங்களுக்கு அளிக்கப்படும்.

பாலிசி முதிர்வு காலம் 30 வருடம்:

அதேபோல 30 வருட கால பாலிசி தொகையினை நீங்கள் தேர்வு செய்து இருந்தீர்கள் என்றால் 15% அடிப்படையில் பாலிசி செய்துள்ள மொத்த தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையினை பாலிசின் இடைப்பட்ட காலமான 15-வது, 20-வது மற்றும் 25-வது வருடத்தில் ஒரு தொகை உங்களுக்கு வழங்கப்படும்.

பாலிசி முதிர்வு காலம் 40 வருடம்:

40 வருட கால பாலிசி தொகையினை நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள் என்றால் 20% அடிப்படையில் பாலிசியின் இடைப்பட்ட காலமான 20-வது, 25-வது, 30-வது மற்றும் 35-வது வருடத்தில் பாலிசி செய்துள்ள மொத்த தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகை உங்களுக்கு அளிக்கப்படும்.

Guaranted Addtion:

நீங்கள் பாலிசி செய்த சில வருடத்திற்கு பிறகு உங்களுக்கு உத்திரவாத தொகை என்று சில விதிமுறைகளின் படி அளிக்கப்படும்.

பாலிசிக்கான காலம்  Rs. 1,000-கான உத்திரவாத தொகை 
6 முதல் 20 வருடம் வரை  நீங்கள் பாலிசி செய்துள்ள மொத்த தொகையில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 50 ரூபாய் உத்திரவாத தொகை வழங்கபடுகிறது.
21 முதல் 30 வருடம் வரை பாலிசி செய்த மொத்த தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 55 ரூபாய் உத்திரவாத தொகை வழங்கபடுகிறது.
31 முதல் 40 வருடம் வரை  நீங்கள் பாலிசி செய்துள்ள மொத்த தொகையில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 60 ரூபாய் உத்திரவாத தொகை வழங்கபடுகிறது.

 

Dhan Rekha LIC Policy-கான முதிர்வு கால தொகை:

Dhan Rekha LIC Policy
வயது  பாலிசி தொகை  பாலிசிக்கான வருடம்  பாலிசி தொகை செலுத்த வேண்டிய வருடம்  Money Back Amount Guaranted Addtion Total Amount 
30 வயது  5 லட்சம்  30 வருடம்  முதல் 15 வருடம் மாதந்தோறும் Rs. 3,348 செலுத்த வேண்டும். Rs. 2,25,000/-  Rs.6,50,000/- Rs. 13,75,000/- 
25 வயது  5 லட்சம் 25 வருடம்  முதல் 10 வருடம் மாதந்தோறும் Rs.4,659 செலுத்த வேண்டும். Rs. 1,00,000/- Rs. 3,75,000/- Rs. 9,75,000/-

 

மேலே அட்டவணையில் சொல்லப்பட்டுள்ளது போல ஒவ்வொரு வருடம் முதிர்வு கால தொகை என்பது வேறுபடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் Rs.1,51,450/- வட்டியாக பெறலாம் அருமையான முதலீட்டு திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil