ரூ.5 லட்சம் செலுத்தி ரூ.10 லட்சம் தரும் சேமிப்பு திட்டம்..! KVP Post Office Scheme Details in Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக இப்பொழுது பெரும்பாலானோரு தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றன. இவர்களுடைய விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காகவே இந்தியாவில் வங்கிகளும் சரி அஞ்சல் அலுவலகம் சரி பலவகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் பெரும்பாலானோரு அஞ்சல் அலுவலகத்தில் தான் சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றன. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மிகவும் நண்பகத்தனமானது, நாம் முதலீடு செய்யும் தொகையை 100% மீண்டும் பெற்றுவிடலாம். இவற்றில் முதலீடு செய்வதினால் எந்த ஒரு பிரச்சனைகளும் ஏற்படாது என்பதினால் பெரும்பாலான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்கின்றன. அந்த வகையில் போஸ்ட் ஆபீசில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று தான் Kisan Vikas Patra சேமிப்பு திட்டத்தை பற்றி தான் நாம் இப்பொழுது படித்தறிய போகிறோம். ஆக இந்த திட்டத்தின் முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
KVP Post Office Scheme Details in Tamil:
கிஷான் விகாஸ் பத்ரா பத்திரத்தில் முதலீடு செய்பவர்கள் ஒரு பெரிய தொகையை லம்சமாக ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும்
நீங்கள் இந்த திட்டத்தில் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்கின்றார்களோ அதற்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் நீங்கள் அக்கௌன்ட் ஓபன் செய்யும் போது சிங்கிள் அக்கவுண்ட், ஜாயிண்ட் அக்கவுண்ட், மைனர் அக்கவுண்ட் ஆகிய மூன்று முறையிலும் அக்கவுண்ட்ஓபன் செய்யலாம்.
ஜாயிண்ட் அக்கவுண்ட் பொறுத்தவரை மூன்று நபர் இணைத்து கணக்கு தொடங்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஐந்து வருடத்தில் Rs.7,28,000/- பெறலாம் மாத சேமிப்பு திட்டம்..!
இந்த சேமிப்பு திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதுவே அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
மேலும் இந்த சேமிப்பு திட்டத்தில் ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமானலும் ஓபன் செய்யலாம்.
நாம் டெப்பாசிட் செய்யும் தொகையை பணமாகவும் கொடுக்கலாம் அல்லது காசோலையாகவும் (cheque) கொடுக்கலாம்.
தற்பொழுது இந்த கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் எவ்வளவு என்றால் 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் உங்கள் ஊரில் உள்ள அஞ்சல் அலுவகத்திற்கு நேரடியாக சென்று இந்த திட்டம் குறித்த விவரங்களை கூறி இப்பொழுதே இணையலாம்.
இந்த சேமிப்பு திட்டத்தில் நீங்கள் 9 வருடம் 7 மாதம் கால அளவில் முதலீடு செய்திருந்தால். அதாவது 115 மாதங்கள் கழித்து நீங்கள் முதலீடு செய்த தொகை இரண்டு மடங்காக உங்களுக்கு வழங்கப்படும்.
கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டத்தில் இணைபவர்களுக்கு ஒரு சர்டிபிகேட் வழங்குகின்றன. இந்த சர்டிபிகேட் இரண்டு வகையாக வழங்கப்படுகிறது. எலக்ட்ரானிக் மோட், பாஸ்புக் மோட் என்று இரண்டு வகையில் வழங்கப்படுகிறது. அவற்றில் உங்களுக்கு எந்த வகை வேண்டுமே அதனை தேர்வு செய்து அந்த சர்டிபிகேட்டை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த சர்டிபிகேட்டை பயன்படுத்தி நாம் லோன் வாங்கலாம். இந்த சான்றிதழுக்கு எவ்வளவு லோன் கிடைக்கும் என்றால் நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு ஏற்றது போல் உங்கள் லோன் வழங்கப்படுகிறது. மேலும் உங்களுக்கான நாமினியையும் இந்த திட்டத்தில் தேர்வு செய்துகொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 501 நாளில் Rs.1,11,858/- வட்டி தரக்கூடிய அருமையான சேமிப்பு திட்டம்..!
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
முதலீட்டு தொகை | 115 மாதங்களுக்கான வட்டி | மெச்சுரிட்டி தொகை |
10,000/- | 10,000/- | 20,000/- |
50,000/- | 50,000/- | 1,00,000/- |
1,00,000/- | 1,00,000/- | 2,00,000/- |
5,00,000/- | 5,00,000/- | 10,00,000/- |
10,00,000/- | 10,00,000/- | 20,00,000/- |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |