Lic-யில் ஆண்கள் மாதம் 1500 ரூபாய் செலுத்தினால் போதும் 6,62,500 ரூபாய் பெறக்கூடிய திட்டம்.!

Advertisement

Lic Aadhar Stambh Policy in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம்.காம் பதிவில் தினமும் ஒரு சேமிப்பு திட்டத்தினை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Lic- யின் ஆண்களுக்கான ஆதார் ஸ்டாம்ப் பாலிசி திட்டம் பற்றிய விவரங்களை கொடுத்துள்ளோம். பெண்களை விட ஆண்களுக்கு பொறுப்புகளும் கடமைகளும் அதிகம். அதனால் ஆண்களுக்கு உதவும் வகையில் Lic ஆண்களுக்கான திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே ஆண்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த திட்டத்தில் சேர்ந்து பணத்தை சேமித்து பயனடையலாம். எனவே வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் ஆண்கள் அனைவரும் இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Lic Aadhar Stambh 943 Details in Tamil:

பாலிசியில் சேர தகுதியானவர்கள்:

Lic ஆதார் ஸ்டாம்ப் பாலிசியில் ஆண்கள் மட்டுமே சேர முடியும். அதிலும் குறைந்தபட்சம் 8 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை உள்ள ஆண்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும்.

அதுமட்டுமில்லாமல் இந்த பாலிசி முடியும் போதும் 70 வயதிற்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

 

இத்திட்டத்தில் செலுத்த வேண்டிய தொகை:

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் தொகை 75,000 ரூபாய் முதல் அதிகபட்ச தொகை 5 லட்சம் வரை செலுத்தலாம்.

பாலிசியில் தொகையினை செலுத்துவதற்கான கால அளவு:

இத்திட்டத்தில் 4 வகையான கால அளவுகளில் பணத்தை செலுத்தலாம். நீங்கள் இந்த பாலிசியில் சேரும் போதே கால அளவை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.  மேலும் நீங்கள் பாலிசி செலுத்தும் காலம் முடிந்து விட்டால் மீண்டும் நீங்கள் பாலிசி செலுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு கொடுக்கப்படும்.

4 வகையான கால அளவுகள்:

  1. மாதம் தோறும்
  2. 3 மாதத்திற்கு ஒருமுறை
  3. 6 மாதத்திற்கு ஒரு முறை
  4. ஒரு வருடத்திற்கு முறை
பெண்கள் Rs. 1,500 மட்டும் Lic-யில் செலுத்தினால் போதும் 6,62,500 ரூபாய் பெறக்கூடிய நல்ல திட்டம்..!

 

பாலிசியின் முதிர்வு காலங்கள்:

Lic Aadhar Stambh 943-யில் இரண்டு வகையான முதிர்வு காலங்கள் உள்ளன.

  1. 10 வருடம்
  2. 20 வருடம்

நீங்கள் இந்த பாலிசியில் சேரும் போதே இந்த இரண்டு முதிர்வு காலங்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த பாலிசியில் 5 லட்சம் செலுத்தினால் பாலிசி இறுதியில் எவ்வளவு தொகை பெறலாம்.?

Lic Aadhar Stambh 943 Details in Tamil
முதிர்வு காலம் பாலிசி தொகை  பாலிசிதாரருக்கான லாயல்டி தொகை  மொத்தமாக பெறக்கூடிய தொகை 
20 வருடம்  5 லட்சம் 1,62,500 ரூபாய் 6,62,500 ரூபாய்

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement