Mahila Samman Savings Certificate Vs Fixed Deposit in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நம் பெற்றோர்கள் அனைவருமே நமக்காக சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். பெண் குழந்தை பிறந்ததில் இருந்து சேமிக்க தொடங்கி விடுவார்கள். அப்படி பெண் குழந்தைகளுக்காகவே பல சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. அதுபோல நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒவ்வொரு சேமிப்பு திட்டங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று அதிக வட்டி தரும் திட்டங்களில் எது சிறந்தது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
அதிக வட்டி தரும் திட்டங்களில் எது சிறந்தது..?
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம்:
பெண் குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது தான் இந்த சட்டம். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெண்கள் கூட தங்கள் பெயரில் அதிகபட்ச தொகையாக 2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
இந்த மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் 7.5 சதவீதம் வரை நிலையான வட்டி வழங்கப்படுகிறது. மேலும் வங்கி வைப்புத் தொகை மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், போன்ற பிரபலமான முதலீட்டுத் திட்டங்களை விட மகிளா சம்மான் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கிறது.
Lic-யில் Rs.23,05,000 வரை பெறக்கூடிய அருமையான பாலிசி |
மிகக் குறுகிய காலத்திற்குள் பெரும் தொகையை சேமிப்பதே இந்த திட்டத்தின் குறிக்கோள் ஆகும். எனவே இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகளாக இருக்கிறது.
இதில் குறைந்தபட்சம் 1000 முதல் அதிகபட்சம் 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும் மார்ச் 31, 2025 வரை மட்டுமே மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
New Scheme👉 ரூ.5 லட்சம் செலுத்தினால் ரூ.10 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..
Fixed Deposit -FD:
நிலையான வைப்பு தொகை (Fixed Deposit) என்பது பண முதலீட்டு திட்டங்களில் ஒரு வகையாகும். இத்திட்டத்தின் கீழ் வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைக்க வேண்டும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது.
வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் என்று நமது விருப்பதற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல Fixed Deposit இல் வைப்பு வைக்கப்பட்ட நிதியை முதிர்வு காலத்திற்கு முன்னரே வங்கியில் இருந்து திரும்ப பெற வேண்டுமென்றால், அதற்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
முதிர்வு காலம் முடிந்த பின் நாம் வைப்பு வைத்திருந்த நிதி வட்டியுடன் நமக்கு கிடைக்கும். மேலும் HDFC வங்கி பொதுமக்களுக்கு 7 சதவீதம் வரை வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியையும் வழங்குகிறது. ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி மாறுபடும்.
மேலும் ஒரு முதலீட்டாளர் Fixed Deposit -களில் பெறும் வட்டியை விட மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் அதிக வட்டியை பெறுகிறார்கள். அதனால் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் தான் பெண்களுக்கு 2 வருட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்ய சிறந்த சேமிப்பு திட்டமாகும்.
New Scheme👉 ஐந்து வருடத்தில் Rs.7,28,000/- பெறலாம் மாத சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |