PMFME Loan Scheme in Tamil
PMFME Loan Scheme in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இந்தியாவில் தொழில் தொடங்கும் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு அருமையான பதிவை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு 35% மானியத்துடன் அரசு கடன் உதவி வழங்குகிறது அது குறித்த தகவல்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன மதியம், யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் போன்ற தகவலை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
என்ன மானியம் திட்டம் அது? | PMFME Loan Scheme in Tamil
பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் (PMFME) PM Formalisation of Micro food processing Enterprises Scheme அன்று அழைக்கப்படுகிறது.
திட்டத்தின் முக்கிய நோக்கம்:
- உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடன் கிடைக்கும் வசதியை அதிகரிக்கச் செய்தல்.
- இலக்கு நிறுவனங்களின் வருவாயைப் பெருக்குதல்.
- உணவின் தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் விதிகளின் ஒத்திசைவு நிலையை மேம்படுத்துதல்.
- ஆதரவு முறைமைகளின் திறன்களை பலப்படுத்துதல்.
- அமைப்புசாரா துறையில் இருந்து முறைசார்ந்த தொழில் துறையாக மாற்றுதல்.
- பெண் தொழில்முனைவோர் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு சிறப்புக் கவனம்.
- கழிவுகளை ஆதாயமாக்கும் செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
- மலைப் பகுதி மாவட்டங்களில் சிறிய வனப்பொருள்கள் மீது கவனம் செலுத்துதல்.
திட்டத்தின் சிறப்பம்சம்:
- மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் திட்டம். மத்திய அரசும் மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளும்.
- கடனுடன் இணைந்த மானியம் மூலம் 2,00,000 குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி கிடைக்கும்.
- இந்தத் திட்டம் 2020-2021 முதல் 2024-2025 வரையில் 5 ஆண்டு காலத்துக்கு அமல் படுத்தப்படும்.
- அழுகும் பொருள்கள் மீது கவனம் செலுத்தப்படும்.
யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்:
இந்த திட்டத்திற்கு இந்தியாவில் தொழில் தொடங்கும் அனைவருமே தகுதியுடையவர்கள் தான். அதாவது தனி நபராக தொழில் தொடங்க நினைத்தாலும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
குழுவாக ஒரு தொழிலை செய்ய விரும்பினாலும் இந்த திட்டத்தில் பேயன் பெறலாம்.
ஏற்கனவே நீங்கள் தொழில் தொடங்கி அந்த தொழிலை மேலும் மேம்படுத்த நினைத்தாலும் இந்த திட்டத்தில் பேயன் பெறலாம்.
திட்டத்தின் முக்கிய விஷயம் என்ன தெரியுமா?
நீங்கள் தொழில் தொடங்க எதை மூலதனமாக வைத்திருக்கிறீர்களோ அதற்கு மட்டும் தான் இந்த கடன் உதவி வழங்கப்படும். உதாரணத்திற்கு கடலை, எள் போன்றவற்றில் இருந்து எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்ய போறீங்க அப்படின்னா அந்த எண்ணெய்யை தயாரிக்க உதவும் இயந்திரத்திற்கு மட்டும் தான் 35% மானியம் வழங்கப்படும். ஆக எதை மூலதனமாக வைத்து தொழில் தொடங்க போறிங்களோ அதற்கு மட்டும் தான் கடன் வழங்கப்படும்.
வயது தகுதி:
இந்திய நாட்டில் 18 வயது நிரம்பிய யாரு வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
யாரெல்லாம் பயன்பெறலாம்:
நீங்கள் செய்ய கூடிய தொழில் மதிப்பு கூடுதலாக இருக்க வேண்டும்.
உதாரணம்:
நெல்லில் இருந்து அரிசி எடுப்பது, கடலையில் இருந்து கடலை மிட்டாய் செய்வது, கடலை எண்ணெய் தயார் செய்வது, மசாலா பொருட்களிலில் இருந்து மசாலா பவுடர் தயார் செய்வது. இது போன்று ஒரு உணவு பொருளிலில் இருந்து இன்னொரு பொருளை தயார் செய்வதை தான் மதிப்பு கூடுதல் என்று சொல்லப்படுகிறது. ஆக நீங்கள் மதிப்பு கூட்ட கூடிய ஒரு தொழிலை செய்ய உள்ளீர்கள் என்றால். அந்த தொழிலுக்கான மூலதனமான இயந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
இந்தியா முழுக்க இத் திட்டம் தொடங்கப்படும்.
2,00,000 தொழில் நிறுவனங்களுக்கு கடனுடன் இணைந்த மானியம் அளிக்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு, உறுப்பினர்களுக்கு செயல்பாட்டு மூலதனம் மற்றும் சிறு உபகரணங்களுக்கு, அடிப்படை முதலீடாக (தலா ரூ.4 லட்சம்) வழங்கப்படும்.
குறிப்பு:
உணவு சார்ந்த தொழில் தொடங்கும் அனைத்து தொழிலுக்கும் இந்த திட்டம் பயன்படும் என்று சொல்ல முடியாது. அதாவது ஹோட்டல், ரெஸ்ட்ராண்ட், சிறுண்டி கடைகள், தள்ளுவண்டி உணவகம் இது போன்ற தொழில்களுக்கு இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது. பதப்படுத்தப்படும் அல்லது மதிப்பு கூட்டப்படும் தொழில்களுக்கு மட்டுமே பயன்படும்.
மேலும் இந்த திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து படியுங்கள் 👉👉 https://pmfme.mofpi.gov.in/
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |