Post Office Gram Sumangal Scheme Details in Tamil
பொதுவாக அனைவருக்குமே தங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும். ஆனால் எந்த சேமிப்பு திட்டத்தை தேர்ந்தெடுத்தால் நல்ல மற்றும் அதிக முதிர்வு தொகை கிடைக்கும் என்பதில் புரிந்து கொள்வதில் தான் அனைவருக்கும் மிக பெரிய குழப்பம் உள்ளது.
அப்படி குழப்பம் உள்ளவர்களுக்காக தான் இன்றைய பதிவு. ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Anticipated Endowment Assurance Scheme பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> என்ன சொல்லுறீங்க போஸ்ட் ஆபிஸில் அதிக போனஸ் அளிக்கக்கூடிய அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா இத்தனை நாளா இது தெரியமா போச்சே
Anticipated Endowment Assurance (Gram Sumangal) in Tamil:
இதனை Gram Sumangal என்றும் அழைப்பார்கள். இது ஒரு மணி பேக் திட்டம். இதில் 50 லட்சம் ரூபாய் வரை உறுதி தொகை வழங்கப்படுகிறது.
இந்த பாலிசி அவ்வப்போது வருமானம் தேவைப்படுபவர்களுக்கு ஏற்ற ஒரு பாலிசி. சர்வைவல் சலுகைகள் காப்பீட்டாளருக்கு அவ்வப்போது வழங்கப்படுகின்றன. இந்த பாலிசியில் இணைவதற்கு குறைந்தப்பட்ச வயது 19 மற்றும் அதிகப்பட்ச வயது 45 ஆகும்.
நன்மைகள்:
இந்த திட்டத்தில் பாலிசிக்கலாம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளாகும்.
இதில் 15 ஆண்டுக் காலப் பாலிசிக்கு, 6 ஆண்டுகள் (20% மணி பேக்), 9 ஆண்டுகள் (20% மணி பேக்), 12 ஆண்டுகள் (20% மணி பேக்) மற்றும் 15 ஆண்டுகள் (40% மணி பேக் மற்றும் பெறப்பட்ட போனஸ்) போன்ற முறையில் மணி பேக் வழங்கப்படுகின்றன.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> என்னது போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு இவ்வளவு அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
இதே 20 ஆண்டுக் காலப் பாலிசிக்கு, 8 ஆண்டுகள் (20% மணி பேக்), 12 ஆண்டுகள் (20% மணி பேக்), 16 ஆண்டுகள் (20% மணி பேக்) மற்றும் 20 ஆண்டுகள் (40% மணி பேக் மற்றும் பெறப்பட்ட போனஸ்) போன்ற முறையில் மணி பேக் வழங்கப்படுகின்றன.
மேலும் காப்பீட்டுதாரர் இறந்துவிட்டால் அவரது வாரிசு அல்லது நாமினிக்கு போனஸ் தொகையுடன் மொத்த உத்தரவாதத் தொகையும் வழங்கப்படும்.
95 ரூபாய் பிரீமியம் செலுத்தி 14 லட்சம் பெறுவது எப்படி?
இத்திட்டத்தில் முதலீட்டாளர் தனது 25 வயதில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். பாலிசி காலம் 20 ஆண்டுகள். மொத்த உத்தரவாதத் தொகை 7 லட்சம் ரூபாய். இதற்காக அவர் மாத தவணையாக 2,853 ரூபாய் செலுத்த வேண்டும்.
அதாவது ஒரு நாளைக்கு 95 ரூபாய் தவணையாக செலுத்த வேண்டும். ஆண்டுக்கு மொத்தமாக 32,735 ரூபாய் செலுத்த வேண்டும். இதனால் 8 ஆவது ஆண்டு, 12 ஆவது ஆண்டு மற்றும் 16 ஆவது ஆண்டு ஆகியவற்றில் முதலீட்டாளருக்கு 20% மணி பேக் அதாவது 1.4 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அதேபோல் 20ஆம் ஆண்டில் முதலீட்டாளருக்கு 40% மணி பேக் அதாவது 2.8 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆண்டுக்கு 48,000 ரூபாய் போனஸ் தொகையும் கிடைக்கும்.
20 ஆண்டுகளுக்கு போனஸ் மட்டும் மொத்தம் 6.72 லட்சம் ரூபாய் கிடைக்கும். எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தமாக 13.72 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> என்னது போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு அருமையான திட்டம் இருக்கா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |